முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குதிரைவாலி மிளகு சீரக அடை ரெசிபி!

குதிரைவாலி மிளகு சீரக அடை ரெசிபி!

 குதிரைவாலி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இரும்பு மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. கூடுதல் எடைக்கொழுப்பை குறைக்க இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பொதுவாக குறைந்த கொழுப்பு, நல்ல செரிமானம் மற்றும் நல்ல இதய ஆரோக்கியத்தை தரவல்லது...

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். அந்த வகையில் குதிரைவாலி மிளகு சீரக அடை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...

தேவையான பொருட்கள்

குதிரைவாலி அல்லது பச்சரிசி – 1 கப்

அவல் – 1/4 கப்

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் / நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியை அவலுடன் சேர்த்து அலசி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியபின் சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

பின்னர் அரைத்த மாவுடன் சேர்த்து, துருவிய தேங்காயையும் கலக்கவும். தோசைக்கல்லை சூடு செய்து, சிறிது மொத்தமான அடைகளாக ஊற்றவும். இரு புறமும் சிறிது எண்ணெயோ நெய்யோ ஊற்றி வேகவைத்து எடுக்கவும். இப்போது மிளகு அடை ரெடி.

குதிரைவாலி 

குறிப்பு

1. இட்லி அரிசி கொண்டு இதை போலவே அடை செய்யலாம். ( அரிசியை3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்)

2. துருவிய தேங்காயிற்கு பதிலாக, பொடியாக நறுக்கிய தேங்காய் பற்களை சேர்க்கலாம் சுவையானதாக இருக்கும்.

மேலும் படிக்க... உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது...

First published:

Tags: Food, Millet Recipes