முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொள்ளு பொடி செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணிப்பாருங்க..!

கொள்ளு பொடி செஞ்சுருக்கீங்களா? இதை ட்ரை பண்ணிப்பாருங்க..!

கொள்ளு பொடி

கொள்ளு பொடி

Kollu Podi | சுகர் குறையவும், உடல் எடையை குறைக்கவும், சளியை சரிச்செய்யவும் இந்த கொள்ளு பொடியை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள் உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சுண்டல் போல வேக வைத்தும், சாப்பிடுவார்கள். கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். கொள்ளு கஞ்சி வைத்தும் கிராமங்களில் சாப்பிடுவார்கள். ஆனால் இட்லி பொடி போல பொடித்து வைக்க , கொள்ளு பொடியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு - 1 கப்

உளுத்தம்பருப்பு - 1/2 கப்

கடலைப்பருப்பு - 1/4 கப்

பூண்டு -4-5

கருவேப்பிலை -1 கப்

உப்பு தேவைக்கேற்ப

பெருங்காயம் தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 10-15

கொள்ளு

செய்முறை

1. முதலில் கடாயில் மூன்று பருப்பையும் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும்.

2. காய்ந்த மிளகாய், கருவேப்பிலையை வறுத்து எல்லாவற்றையும் நன்றாக ஆறிய பின்பு உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3. இதனை இட்லி தோசையுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து பரிமாறலாம்.

First published:

Tags: Blood Sugar, Weight loss