முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சண்டே மீன் குழம்பு வைக்க போறீங்களா..? இந்த மீன் குழம்பு பொடியை இன்னைக்கே அரைச்சு வச்சுக்கோங்க..

சண்டே மீன் குழம்பு வைக்க போறீங்களா..? இந்த மீன் குழம்பு பொடியை இன்னைக்கே அரைச்சு வச்சுக்கோங்க..

மீன் குழம்பு மசாலா

மீன் குழம்பு மசாலா

மீன் குழம்பு செய்வது எளிமையானது என்றாலும் இப்படி பக்குவமாய் , நேர்த்தியாய் சமைப்பது என்பதும் கடினம்தான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மீன் குழம்பு கொதிக்கும்போதே அதன் மணம் அனைவரையும் தன் வசம் கட்டிப்போட்டுவிடும். அசைவம் விரும்பாதவர்களுக்குக் கூட சுவைத்துதான் பார்க்கலாமா என்ற எண்ணத்தை தூண்டும். அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். மீன் குழம்பு செய்வது எளிமையானது என்றாலும் இப்படி பக்குவமாய் , நேர்த்தியாய் சமைப்பது என்பதும் கடினம்தான்.

அதில் சேர்க்கப்படும் ஒவ்வொன்றையும் சரியான அளவில் சேர்க்க வேண்டும். அதிலும் அந்த மீன் குழம்பின் தனித்துவம் என்பது இறுதியாக சேர்க்கப்படும் அந்த மீன் குழம்பு பொடிக்குதான் உண்டு. அதை பலராலும் செய்துவிட முடியாது என்ற கூற்று உள்ளது. ஆனால் இனி உங்களாலும் அது சாத்தியமாகும். இந்த பொடியை பக்குவமாக அரைத்து சரியான அளவில் சேர்த்துப் பாருங்கள். அனைவரும் உங்கள் மீன் குழம்பிற்கு அடிமையாகிவிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 10

தனியா - 2 tsp

சீரகம் - 1 tsp

மிளகு - 1 tsp

வெந்தையம் - 1/2 tsp

சீரகம் - 1 /2 tsp

செய்முறை :

மேலே குறிப்பிட்ட பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

மொத்தமாக போட்டு வறுக்காதீர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெப்பம் பதம் தேவை என்பதால் மொத்தமாகப் போட்டால் ஏதாவதொன்று கருகிவிடலாம்.

Also Read : குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

வறுத்ததும் அவற்றை சூடு தணிய ஆற வையுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் மொத்தமாக போட்டு மைய பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் சூடு தணிந்ததும் காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள்.

அவ்வளவுதான் மீன் குழம்பு மசாலா பொடி தயார்.

First published:

Tags: Fish, Food recipes