Home /News /lifestyle /

சிக்கன் பாப்கார்ன் மிகவும் பிடிக்குமா..? வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிட ரெசிபி...

சிக்கன் பாப்கார்ன் மிகவும் பிடிக்குமா..? வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிட ரெசிபி...

சிக்கன் பாப்கார்ன்

சிக்கன் பாப்கார்ன்

மக்கள் அனைவரும் ரீசன்ட் அடிக்டாக இருப்பது பாப்கார்ன் சிக்கனிற்குத்தான். அதை அடிக்கடி கடையில் வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியமில்லை அல்லது பட்ஜெட்டிற்கு கட்டுப்படியாகவில்லை என நினைத்தால் இந்த ரெசிபியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

சிக்கன் மீதான ஈர்ப்பு எவ்வளவு சாப்பிட்டாலும் குறையாது. அதை எந்த சுவையில் சாப்பிட்டாலும் அருசுவைதான். அந்த வகையில் மக்கள் அனைவரும் ரீசன்ட் அடிக்டாக இருப்பது பாப்கார்ன் சிக்கனிற்குத்தான். அதை அடிக்கடி கடையில் வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியமில்லை அல்லது பட்ஜெட்டிற்கு கட்டுப்படியாகவில்லை என நினைத்தால் இந்த ரெசிபியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வீக் எண்டில் ஜமாய்ச்சிடுங்கள்...

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 250 கி
கார்ன் ஃப்ளார் மாவு - 3 மேஜைக்கரண்டி
முட்டை - 1
ப்ரட் க்ரம்ப்ஸ் - 2 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு,
மிளகு - 1/2 தேக்கரண்டி
வெங்காய பொடி - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு, இஞ்சு பூண்டு விழுது, மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

நன்கு கலந்து உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும்.

வாழைப்பூவில் வடை மட்டும் இல்லை... இப்படியொரு டேஸ்டியான டிஷ்ஷும் செய்யலாம்..!

மேலும் அதில் முட்டை அல்லது மோர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த ப்ரட் க்ரம்பில் தொட்டு எடுக்கவும்.

பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும். பின் கெட்சப்புடன் சேர்த்து பரிமாறவும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chicken popcorn, Food recipes

அடுத்த செய்தி