பீனட் பட்டர் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..! டிப்ஸ் இதோ...

பசிக்கு பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ்.

பீனட் பட்டர் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..! டிப்ஸ் இதோ...
பீனட் பட்டர்
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 5:36 PM IST
  • Share this:
வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பீனட் பட்டர் சமீபத்தில் பலரது ஃபேவரட் ஸ்பிரெட்டராக மாறியுள்ளது. பசிக்கு பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். அந்த வகையில் கடையில் பீனட் பட்டர் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே செய்யலாம். எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை - 1 கப்


கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் - 3 tbsp
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 1 tsp

செய்முறை :

வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலை இருந்தாலும் அதை உரித்து கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதன் தோலை நீக்கிவிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கடையில் விற்பது சுத்தமான நெய் தானா என சந்தேகமா..? வீட்டிலேயே உங்கள் கைபட தயாரிக்க டிப்ஸ் இதோ

கொஞ்சம் மசிந்ததும் எண்ணெய் மற்றும் தேன் , உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.

அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading