Home /News /lifestyle /

கிரில் சிக்கன் வீட்டிலேயே செய்ய டிரை பண்றீங்களா..? உங்களுக்கான ஹோட்டல் சுவை கிரில் சிக்கன் பொடி ரெசிபி...

கிரில் சிக்கன் வீட்டிலேயே செய்ய டிரை பண்றீங்களா..? உங்களுக்கான ஹோட்டல் சுவை கிரில் சிக்கன் பொடி ரெசிபி...

கிரில் சிக்கன் பொடி

கிரில் சிக்கன் பொடி

ஹோட்டல் ஸ்டைலில் அதன் ருசி இருக்க, இந்த கிரில் சிக்கன் பொடி ஒன்று போதும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சுவைக்கலாம்.

கிரில் சிக்கனை ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவதைக் காட்டிலும் திருப்தியாக வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்துச் சாப்பிடலாம் . ஹோட்டல் ஸ்டைலில் அதன் ருசி இருக்க, இந்த கிரில் சிக்கன் பொடி ஒன்று போதும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சுவைக்கலாம். எவ்வாறு தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காய்ந்த குடை மிளகாய் பொடி - 2 tsp
பச்சை மிளகாய் பொடி - 2 tsp
சீரகப் பொடி - 2 tsp
மஞ்சள் பொடி -2 tsp
கறி மசாலா பொடி - 2 tsp
பூண்டுப் பொடி - 2 tsp
ஏலக்காய் பொடி - 2 tsp
தனியா பொடி - 2 tsp
வெங்காயப் பொடி - 2 tsp
கடுகுப் பொடி - 1 tsp
சோம்புப் பொடி - 1 tsp
கரம் மசாலா - 1 tsp
உப்பு - தேவையான அளவு
மிளகுப் பொடி - ருசிக்கு ஏற்ப
இஞ்சிப் பொடி - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)



செய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொடிகளையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின் அவற்றைக் காற்றுப் புகாதா டப்பாவில் நிரப்பி வையுங்கள்.

பேக்கரி சுவையில் காலிஃப்ளவர் 65 : டிரை பண்ணி பாருங்க...

வீட்டில் சிக்கன் சமைக்கும் போது இந்த பொடியைத் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துச் சமையுங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: BBQ Chicken, Chicken masala, Chicken Recipes

அடுத்த செய்தி