ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைத்துப்பாருங்கள்... இதன் மணமே நாவூற வைக்கும்...

இட்லி பொடியை ஒருமுறை இப்படி அரைத்துப்பாருங்கள்... இதன் மணமே நாவூற வைக்கும்...

இட்லி பொடி

இட்லி பொடி

நீங்கள் ஆளி விதையில் இட்லிப் பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பயன்பாட்டிற்கும் நல்லது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எளிதில் கரைக்கும் உணவுப் பொருட்களில் ஆளி விதையும் முக்கியமானது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும், சருமத்தை பராமரிப்பதற்கும் ஏதாவதொரு வகையில் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். அந்த வகையில் நீங்கள் ஆளி விதையில் இட்லிப் பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பயன்பாட்டிற்கும் நல்லது. சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆளிவிதை - 1 கப்

கடலை ப்ருப்பு - 1/4 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

காய்ந்த மிளகாய் - 10

பூண்டு - 10

சீரகம் - 1 ஸ்பூன்

புளி - சிறிதளவு

பெருங்காயத்தூள் - 1/4 tsp

வெல்லம் - 1 tbsp

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் ஆளி விதையை போடுங்கள். படபடவென பொறியும். நன்கு வறுபட்டதும் அதையும் தனியாக தட்டில் கொட்டிக்கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை தனியாக வறுத்துக்கொள்ளவும். அதனுடன் புளியையும் பிச்சிப்போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.

வறுத்த அனைத்தும் ஆறியதும் ஜாரில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

Lunch Box Recipes : மதிய உணவுக்கு இந்த சூப்பரான முட்டை சாதம் செய்து கொடுங்கள்...

அவற்றுடன் பெருங்காயத்தூள், வெல்ல, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளங்கள்.

சற்று ஒன்றும் பாதியுமாக அரைத்தால் சாப்பிட நன்றாக இருக்கும். அவ்வளவுதான் ஆளி விதையில் இட்லி பொடி தயார்.

இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

First published:

Tags: Flax seed, Food recipes