முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மறதிநோய் ஏற்படும் அபாயம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மறதிநோய் ஏற்படும் அபாயம் - அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட்

ஃபாஸ்ட் புட் அல்லது ஜங்க் புட்

நியூராலஜி என்ற ஜர்னலில், அதிக அளவு பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளான சிப்ஸ், பேக் செய்யப்பட்டு வரும் உணவுகள், சாஸ் கெட்சப் வகைகள், குளிர் பானங்கள், பிஸ்கட்கள், ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிடுவது தான் நம்முடைய மூளையில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல விதமான தீவிர நோய்கள் ஏற்படுகின்றன. அதிகமாக செயற்கை சுவை மற்றும் மணமூட்டப்பட்ட, செறிவூட்டப்பட்ட உணவுகள் கடந்த தலைமுறை கண்டிராத பல புதிய நோய்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, வெகு சிலரை மட்டுமே பாதித்த கேன்சர், அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்கள், எலும்புருக்கி நோய், போன்றவை அதிகரித்துள்ளன. குறிப்பாக, டிமென்ஷியா, அல்சைமர் என்ற மூளை செயல்பாடு குறைவால் நினைவாற்றல் தடுமாற்றம், மறதி நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், நோய் என்ற ரீதியில் இல்லாமல், நினைவுகள் மறப்பதும் முதியவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் தான் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மறதி நோயும்

நியூராலஜி என்ற ஜர்னலில், அதிக அளவு பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளான சிப்ஸ், பேக் செய்யப்பட்டு வரும் உணவுகள், சாஸ் கெட்சப் வகைகள், குளிர் பானங்கள், பிஸ்கட்கள், ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிடுவது தான் நம்முடைய மூளையில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகள் நம்முடைய நரம்பு மணடலத்தை பாதித்து, நினைவாற்றல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஞாபக மறதி நோய் மட்டுமல்லாமல் டிமென்ஷியாவும் ஏற்படும் என்று ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

ஞாபக மறதி நோய் காரணங்கள் பற்றிய ஆய்வு

இந்த ஆய்வுக்காக, இங்கிலாந்தில் வசிப்பவர்களின் 5 லட்சம் மக்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு டேட்டாபேசில் இருந்து 72,083 பேரை குழு தேர்வு செய்துள்ளது, ஆய்வில் பங்கேற்க வைத்தது. 55 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றார்கள். இந்த ஆய்வின் பங்கேற்பாளர்கள் யாருக்கும், ஆய்வு தொடங்கிய காலத்தில் டிமென்ஷியா குறைபாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இவர்கள் அனைவருமே 10 ஆண்டுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க உதவும் மாவுச்சத்து உணவுகள் - ஆய்வில் வெளியான தகவல்

ஆய்வு முடியும் காலத்தில், 518 பங்கேற்பாளர்களுக்கு டிமென்ஷியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு, ஆய்வு நடந்த காலத்தில், முந்தைய நாள் என்ன சாப்பிட்டார்கள் மற்றும் என்ன பானங்கள் குடித்தார்கள் என்பதை இரண்டு படிவங்களில் தினமும் நிரப்ப வேண்டும். இதன் மூலம், ஒவ்வொரு நாளும் யார் எவ்வளவு அதிகமாக-பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டார்கள். இதில் பிராசஸ் செய்யப்படும் உணவை எந்த அளவுக்கு சாப்பிடுகிறார்கள் என்பதை குறைவாக பிராசஸ் உணவுகள் சாப்பிடுபவர்கள் முதல் அதிகமாக சாப்பிடுபவர்கள் என்பது வரை, நான்கு குழுவாக பிரித்தார்கள்.

குறைவாக சாப்பிட்டவர்களின் குழுவில், தினசரி அளவில் சராசரியாக 9 % பிராசஸ் செய்யப்பட்ட உணவை, 225 கிராம் என்ற கணக்கில் சாப்பிட்டுள்ளார்கள். அதிகமாக சாப்பிட்டவர்களின் குழுவில், அன்றாட சராசரி உணவில் 28% பிராசஸ் உணவுகள் இருந்தன, இதன் அளவு 825 கிராம். குளிர் பானங்கள், இனிப்புகள் ஆகியவை அதிக அளவு உட்கொள்ளப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளாகும்.

தயிருடன் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சேர்த்து சாப்பிடாதீங்க... அப்புறம் ஆபத்து உங்களுதான்...

ஆய்வறிக்கையின் முடிவுகள்

சீனாவில் உள்ள டியான்ஜின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஹூபிங் லி, ஆய்வைப் பற்றி கூறுகையில், ‘அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, டிமென்ஷியா உண்டாக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளன என்பதை எங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளுக்கு மாற்று உணவுகளையும், டிமென்ஷியா அபாயத்தை குறைக்கும் உணவுகளையும் கண்டறிந்துள்ளோம்’ என்று கூறினார்.

top videos

    உணவு நீண்ட நாட்கள் கெடக் கூடாது என்றும், ஈர்க்கும் சுவையுடன், மணத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ரசாயனங்கள், உணவு நிறமிகள், சுவையூட்டிகள், சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு ஆகியவை அதிக அளவிலும், நம் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் காணப்படும். குறிப்பாக, பாட்டிலில், டின்களில், டெட்ரா பேக்கில் வரும் குளிர்பானங்கள், சிப்ஸ், வறுவல், நம்கீன் போன்றவை மற்றும் பேஸ்ட்ரி, கேக், குக்கீஸ் போன்ற இனிப்புத் தின்பண்டங்கள், ஐஸ்கிரீம், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, முழுக்க முழுக்க வறுத்த கோழி, யோகர்ட், வேகவைத்து பதப்படுத்தப்பட்ட கொண்டை கடலை, பீன்ஸ் மற்றும் தக்காளி போன்றவையும் அதிக பிராசஸ் செய்த உணவுகளில் அடங்கும்.

    First published:

    Tags: Brain Health, Junk food, Memory Loss