இன்றைக்கு பல நோய்களுக்குக் காரணமாக அமைவது உடல் எடை அதிகரிப்பு . இதனால்தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் ஜிம்மிற்குச் செல்வது, டயட்டில் இருப்பது போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். இதுப்போன்று உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களது உணவு முறையில் சுண்டல் (கொண்டைக்கடலை) சேர்த்தால் போதும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
கொண்டைக்கடலையில் அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துகள் உள்ளதால் செரிமானப் பிரச்சனையை சரிசெய்கிறது. இதனால் உடலில் தேவையில்லாத கலோரிகள் தங்குவதில்லை. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் சுண்டலைப்பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரெசிபிகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்வோம். இந்த ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக…
கொண்டைக்கடலை ரெசிபி லிஸ்ட்..
சன்னா மசாலா:
தேவையான பொருள்கள்:
சுண்டல் – 1 கப் ( கருப்பு அல்லது வெள்ளை)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கிராம்பு ,ஏலக்காய் – 2
நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
தக்காளி - 1
செய்முறை:
சுண்டலை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய், தக்காளி , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலக்கிக்கொண்டு அதனுடன் ஊற வைத்த சுண்டலைப் போட்டு சுமார் 20-25 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
சுண்டல் நன்கு வெந்ததும், கொத்தமல்லி இலைகளைத் தூவினால் போதும் சுவையான சன்னா மசாலா ரெடியாக்கிவிட்டது.
கொண்டைக்கடலை பராத்தா:
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 2 கப்
சுண்டல் (அ) கொண்டைக்கடலை – 1 கப்
வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
மாங்காய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் கோதுமை மாவை தண்ணீர் விட்டு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் சுண்டலைக் கழுவி வெதுவெதுப்பான நீரில் சுமார் 3-4 மணி நேரம் ஊற வைத்து 8-9 விசில் வரை வேக வைக்கவும். நன்றான வெந்தவுடன் கொண்டைக்கடலையை மசித்து வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் தூள், கரம் மசாலா, காய்ந்த மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு உருண்டை மாவை எடுத்து, அதில் கொண்டைக்கலை பூரணத்தைச் சேர்த்து சப்பாத்தி மாவை திரட்டுவது போல் திரட்ட வேண்டும். பின்னர் கடாயை சூடாக்கி சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். பராத்தாவை தவாவிற்கு மாற்றி இருபுறமும் வேகவைக்கவும். இதற்கு தயிர் அல்லது சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
குயினோவா கொண்டைக்கடலை சாலட்:
உலகம் முழுவதும் அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக கீரை மற்றும் பீட் குடும்பத்தைச் சேர்ந்த விதையான குயினோவா இன்றைக்கு மக்களிடம் பிரபலமாகியுள்ளது. இதல் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பிற்கு உதவியாக உள்ளது. எனவே குயினோவாவைப் பயன்படுத்தி நீங்கள் சாலட் செய்து சாப்பிடலாம். இதேப்போன்று கொண்டைக்கடலை சாட்டும் உங்களது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chickpeas, Diet, Weight loss