சமீபத்தில் 26,000-க்கும் மேற்பட்ட நடுத்தர வயது இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33 சதவீதம் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி (University of Leeds research), BMC மருத்துவம் இதழில் வெளியிட்ட தகவலில், அவ்வப்போது இறைச்சி உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு சற்று ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறிந்துள்ளது. 26,318 பெண்களில், 822 பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு சுமார் 2 ஆண்டுகளில் காணப்பட்டுள்ளது- இது, மாதிரி மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. வயது போன்ற காரணிகளை சரிசெய்த பிறகு, சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தைக் கொண்ட ஒரே குழுவாக இருந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, சைவ உணவு உண்பவர்கள் மற்றும் இறைச்சி உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை ஒப்பிடும் மிகச் சில ஆய்வுகளில் ஒன்றாகும். சைவ உணவு உண்பவர்கள் ஏன் இடுப்பு எலும்பு முறிவுக்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதற்கான சரியான காரணங்கள் பற்றிய தகவல்களை, ஆராய்ச்சியின் அவசியத்தை விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
சைவ உணவுகள் ஆரோக்கியமானதா?
லீட்ஸில் உள்ள உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பள்ளியின் முனைவர் பட்ட ஆய்வாளரான ஜேம்ஸ் வெப்ஸ்டர் கூறுகையில், ‘எங்கள் ஆய்வு சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் பற்றிய சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், சைவ உணவுகளை கைவிடுமாறு மக்களை எச்சரிக்கவில்லை. எந்தவொரு உணவைப் போலவே, தனிப்பட்ட சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதும் சீரான ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு என்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியம்.
சைவ உணவுகள் நபருக்கு நபர் பரவலாக மாறுபடும். சைவ உணவுகள் பெரும்பாலும் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஊட்டச்சத்துக்களை குறைவாக கொண்டிருக்கின்றன. இந்த வகையான ஊட்டச்சத்துக்கள் பொதுவாக புரதம், கால்சியம் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவை தாவரங்களை விட இறைச்சி மற்றும் பிற விலங்கு பொருட்களில் அதிகமாக உள்ளன’ என்று கூறினார்.
பிரபலமடைந்து வரும் தாவர அடிப்படையிலான உணவுகள்:
சைவ உணவுகள் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. 2021 YouGov கணக்கெடுப்பு, இங்கிலாந்தில் சைவ மக்கள் தொகையின் அளவை தோராயமாக 5 முதல் 7 சதவீதம் எனக் காட்டுகிறது. நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல நாட்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்க சைவ உணவுகளை மக்கள் விரும்புகின்றனர்
காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முயற்சியில் விலங்கு பொருட்களின் (animal products) நுகர்வு குறைக்கப்பட வேண்டும் என்ற உலகளாவிய அழைப்பும் உள்ளது. எனவே, சைவ உணவு உண்பவர்களில் இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தைப் புரிந்துகொள்வது பொது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகி வருகிறது.
தாவர அடிப்படையிலான உணவுகளில் இடுப்பு எலும்பு முறிவு அபாயத்திற்கான இணைப்புகள் பற்றிய ஆதாரங்கள் இல்லை. இந்த ஆய்வு, தாவர அடிப்படையிலான உணவு முறைகளில் நீண்டகாலமாக இருக்கக்கூடிய ஆபத்து மற்றும் அந்த அபாயங்களைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி கூறுகிறது.
குறைந்த பிஎம்ஐ-யின் விளைவு:
சைவ உணவு உண்பவர்களின் சராசரி பிஎம்ஐ (BMI) வழக்கமாக இறைச்சி உண்பவர்களின் சராசரியை விட சற்று குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. முந்தைய ஆராய்ச்சி, குறைந்த பிஎம்ஐ மற்றும் இடுப்பு எலும்பு முறிவு அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்டுகிறது.
குறைந்த பிஎம்ஐ என்பது மக்கள் எடைக்குறைவாக இருப்பதைக் குறிக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுவதற்கு குறைந்த பிஎம்ஐ காரணமா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆய்வு தேவை என்று கூறுகின்றனர்.
ஆண்களிடமும் இதே போன்ற முடிவுகள் இருக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்தவும், உடல் எடையின் பங்கை ஆராயவும், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் இறைச்சி உண்பவர்களில் வெவ்வேறு விளைவுகளுக்கான காரணங்களை அடையாளம் காணவும் மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றனர் லீட்ஸ் ஆய்வாளர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vegan diet, Vegetarian