முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Muscle Health | தசை ஆரோக்கியத்திற்கு புரத உணவுகளை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?

Muscle Health | தசை ஆரோக்கியத்திற்கு புரத உணவுகளை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?

சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படும் உடலின் உள் உயிரியல் கடிகாரம் புரத உட்கொள்ளலுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படும் உடலின் உள் உயிரியல் கடிகாரம் புரத உட்கொள்ளலுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படும் உடலின் உள் உயிரியல் கடிகாரம் புரத உட்கொள்ளலுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

புரதங்கள் என்பது ஒருவரின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு அத்தியாவசிய சத்து ஆகும். புரதங்கள் அமினோ அமிலங்களின் நீண்ட சங்கிலிகளால் உருவானவை. அவை எலும்புத் தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. புரதங்களின் நன்மைகள் குறித்து நாம் அனைவரும் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இருப்பினும், சமீபத்திய ஆய்வுகளில், சரியான நேரத்தில் சரியான அளவு புரதத்தை எடுத்துக்கொள்வது தசைகளின் முறையான வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இது காலவரிசை என்று அழைக்கப்படுகிறது. அதாவது நீங்கள் புரத உணவுகளை எப்போது சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை முக்கியமாக இது எடுத்துரைக்கிறது.

சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படும் உடலின் உள் உயிரியல் கடிகாரம் புரத உட்கொள்ளலுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் இந்த ரிதத்தை பின்பற்றுகின்றன. மேலும் சர்க்காடியன் ரிதம் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி போன்ற வாழ்க்கை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. சுவாரஸ்யமாக, இந்த கடிகாரத்தின் படி புரத செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் போன்ற செயல்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் ஏற்ற இறக்கமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், முன்பு வெளியான ஆய்வுகளின் படி, காலை உணவு மற்றும் மதிய உணவு வேளையில் புரதத்தை உட்கொள்வது பெரியவர்களில் எலும்பு தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தசை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் புரத நுகர்வு நேரத்தின் தாக்கம் குறித்த விவரங்கள் இப்போது வரை புதிராகவே உள்ளன. அதிர்ஷ்டவசமாக, பேராசிரியர் ஷிகெனோபு ஷிபாடா தலைமையிலான வசேடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தசைகள் மீது நாள் முழுவதும் புரத விநியோகத்தின் விளைவைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர்.

இதற்காக அவர்கள் ஆய்வக எலிகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை அதிக (11.5% விகிதத்தில்) அல்லது குறைந்த (விகிதத்தில் 8.5%) புரத உணவுகளைக் கொடுத்து வந்தனர். அதில் காலை உணவில் புரோட்டீன் உட்கொள்ளும்போது எலிகளின் தசை வளர்ச்சி அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது அவற்றின் ​​காலில் உள்ள ஆலை தசையின் தூண்டப்பட்ட ஹைபர்டிராஃபியை மதிப்பிடுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

குறிப்பாக, காலை உணவு வேளையின் போது 8.5% புரதத்தை எடுத்துக்கொண்ட எலிகளில் கட்டுப்பாட்டு தசையின் வளர்ச்சிக்கு எதிராக தசை ஹைபர்டிராஃபியின் வளர்ச்சி விகிதம் 17% ஆக அதிகரித்திருந்தது. மேலும் எலிகள் இரவு உணவில் 11.5% புரதத்தை எடுத்துக்கொண்ட போதிலும் கூட இந்த வளர்ச்சி காணப்படவில்லை. அதேபோல, கிளை-சங்கிலி அமினோ அமிலங்களுக்கான சுருக்கமான பி.சி.சி.ஏ எனப்படும் ஒரு வகை புரதத்தை காலை வேளையில் உட்கொள்வது எலும்பு தசைகளின் அளவை அதிகரித்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

அவர்கள் அதே எலிகள் மீது டயட் உணவு பரிசோதனைகளை மீண்டும் செய்தனர். ஆனால் இதேபோன்ற தசை மாற்றத்தை கண்டறியவில்லை. இது புரத உட்கொள்ளல் சூழல் மற்றும் தசை வளர்ச்சியில் சர்க்காடியன் ரிதத்தின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தியது. செல் அறிக்கைகளின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் ஷிபாடா கூறியதாவது, “ஒரு நாளின் தொடக்கத்தில் புரோட்டீன் நிறைந்த உணவு, அதாவது காலை உணவு வேளையில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எலும்பு தசை ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். இது தசைகளை பராமரிக்க மற்றும் தசை அளவு மற்றும் பிடியின் வலிமையை மேம்படுத்த உதவும் ” என்று கூறியுள்ளார்.

Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பிராவின் வரலாறு தெரியுமா? நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருப்பதற்கான 5 அறிகுறிகள்!

அவர்களின் கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்குப் பொருந்துமா என்பதைச் சரிபார்க்க, குழு தங்களது மேம்பட்ட ஆய்விற்கு பெண்களை உட்படுத்தியது. எலும்பு தசைக் குறியீடு (எஸ்.எம்.ஐ) மற்றும் பிடியின் வலிமையை அளவிடுவதன் மூலம் தீர்மானிக்கப்படும் அவர்களின் தசை செயல்பாடு, பெண்கள் உட்கொள்ளும் புரதச்சத்து நிறைந்த உணவின் நேரத்துடன் மாறுபடுகிறதா என்று சோதனை செய்தனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அறுபது பெண்கள் இரவு உணவைக் காட்டிலும் காலை உணவில் புரதத்தை எடுத்துக் கொண்டனர். அதில் அவர்கள் சிறந்த தசை செயல்பாடுகளைக் காட்டினர். இதன் மூலம் இந்த ஆராய்ச்சி காலை வேளையில் எடுத்துக்கொள்ளும் புரதம் நல்ல பலன் தருவதை குறிக்கிறது.

பேராசிரியர் ஷிபாடா அவர்களின் ஆய்வின் கண்டுபிடிப்புகள் மேற்கு மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களின் தற்போதைய உணவு முறைகளில் பரவலான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் அவர்கள் பாரம்பரியமாக காலை உணவில் குறைந்த அளவு புரதத்தை உட்கொள்கிறார்கள். இது குறித்து அவர் பேசியதாவது, “பொதுவாக, காலை உணவில் உள்ள புரத உட்கொள்ளல் சராசரியாக 15 கிராமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது இரவு உணவில் நாம் உட்கொள்ளும் 28 கிராம் புரதத்தை விட குறைவானது. தற்போது, எங்கள் கண்டுபிடிப்புகள் இந்த விதிமுறையை மாற்றுவதற்கும் காலை உணவு நேரத்தில் அதிக புரதத்தை உட்கொள்வதற்கும் வலுவாக துணைபுரிகின்றன." என்று கூறியுள்ளார். ஒப்பீட்டளவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளில் முட்டை, டோஃபு, ஹெம்ப்ஸீட், ஓட்மீல், சியா மற்றும் நட் பட்டர் ஆகியவை அடங்கும். ஆரோக்கியமான தசைகளை உறுதி செய்வதற்கு நமது உணவு முறைகளில் மேற்கொள்ளும் ஒரு எளிய மாற்றம் நமக்கு ஒரு திறவுகோலாக இருக்கும் என்று இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது.

First published:

Tags: Healthy Food, Healthy Lifestyle, Protein Diet, Protein rich