குளிர்காலம் வந்தவுடன் சூடான மற்றும் சுவையான உணவுகளை தேடத் தொடங்கிவிட்டோம். ஜிலேபி முதல் குலாப் ஜாமூன்களை தேடித் தேடி சாபிடுகிறோம். ஆனால், நாம் அனைவரும் மனதில் கொள்ளவேண்டியது என்னவென்றால், எக்காலத்திலும் எந்த நேரத்திலும் சரிவிகித உணவு சாப்பிடுவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலங்கள் தொற்றுநோய்களுக்கான நேரம் என்பதால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் டையட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட்டுகள்:
கார்போஹைட்ரேட்டுகளும் உடலுக்கு அவசியமானவை. முழு தானியங்களை சாப்பிடும்போது ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளின் சத்து கிடைக்கும். ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா பேசும்போது, திணை உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என கூறுகிறார். ஏனெனில் முழு தானியங்கள் பெரும்பாலும் பச்சையம் இல்லாதவை எனக் கூறும் அவர், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை எனத் தெரிவித்துள்ளார். ஊட்டச்சத்து மிக்க இந்த தானியங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவுகின்றன.
Must Read | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!
புரதம்:
புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டாணி, பீன்ஸ் மற்றும் கீரை போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்திருக்கின்றன. மீன், இறைச்சி, முட்டைகளில் நல்ல தரமான புரதங்கள் இருக்கின்றன. டையட் திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்றால், இந்த உணவுகளையும் பட்டியலில் சேர்த்து சரியான நாட்களில் எடுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் உடலுக்கு சமமான அளவில் நல்ல தரமான புரதம் கிடைக்கும். இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களிலும் தரமான புரதங்கள் இருக்கிறது. பொதுவாக குளிர் காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்ற கட்டுக்கதை ஒன்று இருக்கிறது. அதனை பொருட்படுத்தாமல் தேவையான அளவு தயிரையும் சாப்பிடுங்கள். புரோபயோடிக்கான தயிர் செரிமானத்திற்கும் உதவும்.
நீர்:
குளிர்காலத்தில் பொதுவாக அதிகம் தாகம் எடுக்காது. ஆனால், சரியான நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றால் சூப்களை சாப்பிடுங்கள். கீரை சூப் உள்ளிட்டவைகளை சாப்பிடும்போது உடல் ஹைட்ரேட்டாக இருக்கும். காஃபி குடிப்பதை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தெரிவிக்கிறார். கேரட் அல்வா, ஆளிவிதைகளை சாப்பிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழுப்பு:
உடலை சூடாக வைத்திருப்பதில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. கடும் குளிர் நிலவும் சூழல்களில் வெண்ணெய்யை சாப்பிடலாம். அவை உடலை சூடாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்கும். நெய் மற்றும் கடுகு எண்ணெய்யை குளிர் காலத்தில் அதிகம் பயன்படுத்துங்கள் என ஷில்பா அரோரா தெரிவித்துள்ளார். நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. பெக்கன்கள், அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாக்களை சமச்சீர் உணவு பட்டியலில் தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:
தொற்றுநோய் மற்றும் வைரஸ் பாதிப்புகளில் இருந்து உடலை வைட்டமின்களும், தாதுக்களும் பாதுகாக்க உதவுகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இவை கொய்யா, ஆரஞ்சு போன்ற பருவகால பழங்களிலும், நெல்லிக்காயில் அதிகம் கிடைக்கும். அந்தந்த காலக்கட்டத்தில் கிடைக்கும் பருவக்கால பழங்களை தவறாமல் வாங்கிச் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குளிர்காலத்தில் 70 விழுக்காடு அளவுக்கு கீரை இருக்க வேண்டும் என ஷில்பா அரோரா தெரிவிக்கிறார். கீரைகளில் குளோரோபில் இருப்பதாக கூறும் அவர், குடல் ஆரோக்கியத்துக்கும் செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என கூறுகிறார். முள்ளங்கி, பீட்ரூட், டர்னிப், காலிஃபிளவர், ப்ராக்கோலி உள்ளிட்ட காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளுமாறு ஷில்பா பரிந்துரைக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diet, Healthy Food, Healthy Life, Winter