இக்காலத்தில் உள்ள பெண்கள் குடும்பத்தை கவனிப்பது மட்டுமின்றி பணிக்கும் செல்கின்றனர். பணியிடத்திலும் பதவிகளை ஏற்று, அதே நேரத்தில் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொள்கின்றனர். எனவே, அவர்களின் அன்றாட உணவு மற்றும் ஊட்டச்சத்து நுகர்வு இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில் தொடர முடியாது என்பதில் ஆச்சரியமில்லை. NFHS ஆய்வின்படி (2015-16), இந்தியாவில் இளம் வயதுடைய பெண்களில் நான்கில் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பது தெரிய வருகிறது. இது நகர்ப்புற பெண்களுக்கு மட்டும் அல்ல; இந்த ஊட்டச்சத்தின்மை விகிதம் கிராமப்புற பெண்களிடையேயும் அதிகமாக உள்ளது. நகர்ப்புற பெண்களுடன் ஒப்பிடுகையில் 40.6 சதவிகிதம் பேர் கிராமப்புற பெண்களாக உள்ளனர் என்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். சரி, இந்த ஊட்டச்சத்தின்மையை போக்க மருத்துவ நிபுணர்கள் சொல்லும் 5 சூப்பர்ஃபுட்ஸ் குறித்து பார்க்கலாம்.
கீரை: பச்சை இலைக் காய்கறியானது ஊட்டச்சத்து மதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இதில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது, கீரையை மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்கள் அனுபவிக்கும் PMS-இன் உடல்ரீதியான விளைவுகளைப் போக்க உதவுவதாக அறியப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவும். எனவே, கீரையை பெண்களுக்கான சூப்பர்ஃபுட் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க | 20, 30, 40… வயதிற்கு ஏற்ப மாற்றம் காணும் பெண்ணுறுப்பு… நிச்சயம் அறிய வேண்டியவை..!
பால்:
பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாம். இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, பால் கால்சியத்தின் ஏராளமான ஆதாரமாக உள்ளதால் எழும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான தினசரி அளவை உங்களுக்கு வழங்கி விடும். இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.
ப்ராக்லி:
Cruciferous காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த இந்த ப்ராக்லி, பெண்களுக்கு ஆரோக்கியமான உணவு விருப்பங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது, குறிப்பாக மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, மேலும் எலும்பு அடர்த்திக்கும் பங்களிக்கிறது.
பீட்ரூட்:
பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்குகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது. இந்த நன்மைகள் பீட்ரூட்டில் உள்ள கனிம நைட்ரேட்டுகளின் விளைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பீட்ரூட் மற்றும் அதன் இலைகள், பீட் கீரைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. மேலும் அவை சூப்பர்ஃபுட் ஆகவும் அறியப்படுகிறது.
இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!
பாதாம்:
பாதாம் ஒரு ப்ரீபயாடிக் உணவாகும். இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும் போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. கூடுதலாக, 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரத உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதில் நிறைய மெக்னீசியம் சத்துகள் உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.