ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தினையில் சுவையான, சத்தான தோசை சுட டிப்ஸ் : அதோடு அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

தினையில் சுவையான, சத்தான தோசை சுட டிப்ஸ் : அதோடு அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

தினை தோசை

தினை தோசை

சிறுதானிய தோசை அல்லது இட்லி செய்வதற்கு நீங்கள் ஒவ்வொரு சிறுதானிய வகையையும் தனித்தனியாக ஊற வைப்பது அவசியம். தானியங்களை நன்கு கழு?

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தென்னிந்திய குடும்பங்கள் அனைத்தும் எப்போதும் விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது இட்லி, தோசை தான். இருப்பினும் இவற்றை சாதாரணமாக அரிசி மாவில் செய்வதை விட, சற்று வித்தியாசமாகவும், சத்தான முறையிலும் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் உங்கள் வீட்டில் சிறுதானியங்கள் இருந்தால் அதை வைத்தே சூப்பரான முறையில் தோசைக்கு மாவு தயாரிக்கலாம். அதிலும் சரியான முறையில் மாவு தயாரிக்க சில ஈஸியான வழிமுறைகளை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

1. உங்கள் டயட்டை மிகவும் சத்துள்ளதாக மாற்ற நினைத்தால் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய ஆரோக்கியமான சிறுதானிய வகைகளுடன் உங்கள் நாளை ஆரம்பிக்கலாம். நீங்கள் நடுநிலை தானியங்களையும் தேர்வு செய்யலாம். ஆனால் மேற்கண்ட தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களின் உள்ளடக்கம் அதிகம் இருப்பதால், அவை உங்கள் குடலை சிறந்த முறையில் சுத்தப்படுத்த உதவுகின்றன.

2. சிறுதானிய தோசை அல்லது இட்லி செய்வதற்கு நீங்கள் ஒவ்வொரு சிறுதானிய வகையையும் தனித்தனியாக ஊற வைப்பது அவசியம். தானியங்களை நன்கு கழுவி குறைந்தபட்சம் 6-8 மணி நேரம் ஒழுங்காக ஊறவைக்க வேண்டும்.

3. ஒரு நேரத்தில் ஒரு சிறுதானியத்தை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. ஆனாலும் நீங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தானியங்களை கலந்து சமையலில் உபயோகப்படுத்தலாம். தானியங்களை கலந்து சாப்பிடுவது என்பது நீங்கள் சாப்பிட முடியாத அல்லது நச்சுத்தன்மையுள்ள ஒன்றை உட்கொள்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. உங்களுக்கு குடலுக்கு எந்த ஒரு அமிலத்தன்மை பிரச்சினையும் கொடுக்கவில்லை என்றால், ஒருமுறை மட்டும் பல தானியங்களை ஒன்றாக கலந்து சமைத்து சாப்பிடலாம்.

4. அதேபோல சிறுதானியங்களுடன் நீங்கள் பயிறு வகைகளையும் சேர்க்கலாம். பயறு வகைகளை எப்போதும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறவைக்கும்போது ஒருபோதும் டைகோட்டுகள் மற்றும் மோனோகாட்களை கலக்க வேண்டாம்.

5. அந்த வகையில் நீங்கள் தினை தோசைக்கு, தினையுடன் பயறு வகைகளை சேர்க்கும் பொது 2: 1, 1: 1, 4: 1 மற்றும் 3: 1 என்ற விகிதங்களை தேர்வு செய்யலாம்.

6. பொதுவாக நீங்கள் இந்த கலவையை 2:1 என்ற விகிதத்தில் கலக்கலாம். இதன் பொருள் 1 கப் தினை மற்றும் ½ கப் பருப்பு என ஊறவைத்து அரைக்கலாம். இதனுடன் தனியாக ஊற வைத்த வெந்தய விதைகளையும் சேர்த்து அரைக்கலாம்.

7. தினை மாவு அரைக்கும் போது நீங்கள் விரும்பினாலோ அல்லது தேவைப்பட்டாலோ கொஞ்சம் அரிசியையும் சேர்த்து கொள்ளலாம். தோசை மொறு மொறு பதத்திற்கு கிடைக்கும். அந்த வகையில், தினை மற்றும் பச்சை பயிறு இரண்டையும் பயன்படுத்தி ஒரு சத்தான தோசை மாவினை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து காண்போம்.
 
View this post on Instagram

 

A post shared by Shalini- Millets Coach (@crazykadchi)தினை, பச்சைப்பயிறு தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1. தினை - 1 கப்

2. பச்சை பயிறு -½ கப்

3. வெந்தயம் - 1 தேக்கரண்டி

4. புதினா, கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு

5. உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தினை, பச்சை பயிறு மற்றும் வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்க வைத்த வேண்டும்.

அதன் பிறகு மூன்றையும் நன்கு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இதற்கு தினை மற்றும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தலாம்.

நன்றாக ,மாவு பதத்திற்கு அரைத்த பிறகு அந்த கலவையுடன் உப்பு சேர்த்து சுமார் 12 முதல் 16 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அப்போதுதான் மாவு நன்றாக புளிக்கும்.

அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலநிலையை பொறுத்து நீங்கள் ஊற வைக்கும் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். பின்னர், தோசை மாவுடன் புதினா, கொத்தமல்லி இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடிக்கும் என்றால், மாவு கலவையுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். தோசை கட்டாயம் சுவையாக இருக்கும்.

தினை தோசைக்கு ஏற்றவாறு தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி அரைத்து வைத்து அதனை பரிமாறுங்கள். இதனை தினமும் சாப்பிட்டாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Dosa, Millets