உடல் எடையை குறைக்க விரும்பும் பலருக்கும் ஏற்படுகின்ற பெரிய குழப்பம் இதுதான். டோஃபு எடுத்துக் கொள்வதா அல்லது பன்னீர் எடுத்து கொள்வதா என்பதை தீர்மானிப்பதே ஆகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது சமநிலையில் வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த இரண்டு உணவுப் பொருள்களைத் தான் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.
உதாரணத்திற்கு பன்னீர் என்பது பாலில் உள்ள முழுமையான கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் கொழுப்பு, கால்சியம், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. டோஃபு என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுவது ஆகும். இதிலும் ஊட்டச்சத்து நிரம்பியுள்ளது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன, எது சிறந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டோஃபு என்றால் என்ன.?
சோயாபீன் பாலின் தயிர் வடிவத்திற்கு பெயர் தான் டோஃபு என்று அழைக்கப்படுகிறது. சாஃப்ட் டோஃபு, சில்கென் டோஃபு, ஃபர்ம் டோஃபு, பெர்மெண்டெட் டோஃபு என பல வகைகளில் இது கிடைக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை கொண்டது.
டோஃபுவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
இதில் அதிக புரதம் உள்ளது. அதிகப்படியான அமினோ அமிலங்கள் கிடைக்கும். வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியது. கால்சியம், மெக்னீசியம், காப்பர், விட்டமின் ஏ, மாங்கனீஸ் போன்றவை இடம்பெற்றுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். இதனால் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறும். ஆய்வுகளின்படி சர்க்கரை நோயாளிகள் டோஃபு எடுத்துக் கொண்டால் சிறுநீரில் வெளியேறும் புரதம் குறையும்.
குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்
இதன் பலன்கள்
டோஃபு எடுத்துக் கொள்வதால் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் இதய நோய்களை தடுக்க முடியும்.
எடை மேலாண்மை
உடல் எடை குறைப்பு அல்லது மேலாண்மை செய்வதற்கு உதவியாக இருக்கிறது. உடல் பருமனை தடுக்கலாம்.
40 வயதிற்குப் பின் பலவீனமாகும் எலும்புகள்... தடுக்க உதவும் இந்த 5 உணவுகளை தினமும் எடுத்துக்கோங்க...
எலும்புகள் பலமாகும்
டோஃபு சாப்பிடுவதன் மூலமாக எலும்பு தேய்மானம் தடுக்கப்படும், எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.
பன்னீர் என்றால் என்ன?
பசும்பால், எருமை பால் அல்லது ஆட்டுப் பால் போன்ற ஏதோ ஒன்றின் சீஸ் வடிவமாக இருப்பது தான் பன்னீர் ஆகும். எலுமிச்சை சாறு கலந்து இதை தயாரிக்கின்றனர்.
சியா விதைகள் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துமா..? ஆய்வு தரும் பதில்
ஊட்டச்சத்துக்கள்
பன்னீரில் கொழுப்பு, கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள செலீனியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நம் மன நலனுக்கு உகந்தது.
பன்னீரின் பலன்கள்
சுவை மிகுந்த பன்னீரை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடல் எடையை குறைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா போன்ற மூச்சு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
செரிமானம் மேம்படும்
பன்னீரில் பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது நம் செரிமானக் கட்டமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
கிரீன் டீ கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா..? ஆய்வு சொல்லும் முடிவுகள்
உடல் எடையை குறைக்கும்
குறைவான கலோரி மற்றும் அதிக புரதம் நிறைந்த பன்னீர் என்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பற்கள் மற்றும் எலும்புகள்
கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் இதில் அடங்கியுள்ளன. பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு அது உதவியாக இருக்கிறது.
தசை கட்டமைப்பு
நம் உடலில் தசை வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் பன்னீரில் உள்ளன. தசை சிதைவதையும் இது தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழி இதோ! GBOMBS டயட்
புற்றுநோயை தடுக்கும்
புற்றுநோய் ஆபத்துகளை தடுக்கும் ஆற்றல் பன்னீரில் உள்ளது. குறிப்பாக வயிறு, மலக்குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களை தடுக்கிறது.
எது ஆரோக்கியமானது
டோஃபு மற்றும் பன்னீர் ஆகிய இரண்டிலும் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. எனினும், புரதம் அதிகம் வேண்டும் என்றால் பன்னீர் சரியானது. விலங்குகளை வதைக்காமல் முழுமையாக சைவம் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு டோஃபு சூப்பரான சாய்ஸ் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.