ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நூடுல்ஸ் ரெசிபி - எளிதாக செய்யலாம்..!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நூடுல்ஸ் ரெசிபி - எளிதாக செய்யலாம்..!

noodles

noodles

Noodles | குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகள் ஆரோக்கியமானது. தற்போது குதிரைவாலி நூடுல்ஸ், ராகி நூடுல்ஸ், சிகப்பரிசி நூடுல்ஸ் போன்ற வகைகள் கடைகளில் கிடைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நூடுல்ஸுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீன உணவின் சுவைக்கு அனைவரும் அடிமை. பலவகையான காய்கறிகளை சேர்ப்பதில் இருந்து மசாலாப் பொருட்கள் என ஆரோக்கிய வகைகள் அனைத்தையும் சேர்த்து சமைக்கலாம். குழந்தைகள் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற செய்வதற்கான அற்புதமான வழிகளில் இதுவும் ஒன்றாகும். எனவே, 20 நிமிடங்களில் தயாராகிவிடக்கூடிய மிக எளிதான நூடுல்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு காண்போம்.,

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - 1 பாக்கெட்

எண்ணெய், உப்பு - தேவையான பொருட்கள்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கருப்பு மிளகு தூள் - 1 ஸ்பூன்

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

வினிகர் - 1 ஸ்பூன்

சில்லி சாஸ் - 1 ஸ்பூன்

முட்டைக்கோஸ் - 1 கப்

வெங்காயம் - 1 கப்

கேப்சிகம் - 1 கப்

கேரட் - 1 கப்

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

செய்முறை :

முதலில் நூடுல்ஸை வேகவைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தொடர்ந்து கிளறவும். இப்போது இதனுடன் முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்க்கவும். இதன் பிறகு வேகவைத்த நூடுல்ஸை போட்டு கிளறவும். இதனை தொடர்ந்து உப்பு, மிளகுத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். நீங்கள் விரும்பினால் துருவிய கேரட் சீஸ் சேர்க்கலாம். பின்னர் நன்கு கிளறி சில நிமிடங்களுக்கு பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாக பரிமாறலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சிறுதானிய நூடுல்ஸ் ரெசிபி :

குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகள் ஆரோக்கியமானது. தற்போது குதிரைவாலி நூடுல்ஸ், ராகி நூடுல்ஸ், சிகப்பரிசி நூடுல்ஸ் போன்ற வகைகள் கடைகளில் கிடைக்கிறது. இந்த நூடுல்ஸ் உங்கள் குழந்தைகளுக்கு சத்தானது. இதனை எப்படி செய்வது என இங்கு காண்போம்.,

Also Read : டேஸ்டியான பிரியாணி சமைப்பதற்கான சில டிப்ஸ்...

முதலில் ஒரு வாணலியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும். சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் தற்போது குதிரைவாலி/ராகி/ சிகப்பரிசி நூடுல்ஸ் சேர்க்கவும். 5 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். பின் தண்ணீரை வடிகட்டிவிட்டு நூடுல்ஸை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Also Read : உடல் எடையை குறைக்க உதவும் புரோட்டீன் நிறைந்த 5 காலை உணவுகள்!

மற்றொரு வாணலியில், சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கிவிட்டு, பெரிய வெங்காயம், கேரட், குடை மிளகாய், வெங்காயத்தாள், முட்டைகோஸை பொடியாக நறுக்கி அதனை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் இறக்கினால் சூப்பரான சத்தான நூடுல்ஸ் ரெடி!

First published:

Tags: Healthy Food, Kids Food, Lifestyle