பொதுவாக, வாழைப்பழங்கள் பயணம் போன்ற மனித அனுபவத்தில் ஒருங்கிணைந்தவை. சில சான்றுகள் நாம் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்த அதே நேரத்தில் இருந்து வாழைப்பழங்களை சாப்பிட்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது. நாம் நாளுக்கு நாள் புதிதாக வளர்ச்சியடைந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வாழைப்பழங்கள் நிலையானதாகவே இருக்கின்றன- அதுவும் நல்ல காரணத்திற்காக. இந்த எளிய மஞ்சள் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம். நிபுணர்களின் கூற்றுப்படி, வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்ப்பது உடலின் பல பகுதிகளிலும் ஆரோக்கிய ஆதாயங்களை ஏற்படுத்தும்.
சருமத்தை மேம்படுத்தும்:
ஊட்டச்சத்து நிபுணரும், தி கேண்டிடா டயட்டின் ஆசிரியருமான லிசா ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ஒரு வாழைப்பழத்தில் தினசரி மாங்கனீசு தேவைகளில் 13 சதவீதம் உள்ளது என்று விளக்குகிறார். மாங்கனீசு உட்கொள்வது தோல் தோற்றத்தை மேம்படுத்தும் என்றும் கூறுகிறார். ஏனெனில் கொலாஜனை உருவாக்குவதற்கு மாங்கனீசு அவசியம். இது இளமை தோற்றத்தை உருவாக்குகிறது மற்றும் சுருக்கங்களுக்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. எனவே, விலையுயர்ந்த சரும பராமரிப்பு வழக்கத்தை மறந்து விடுங்கள்; அதற்கு பதிலாக வாழைப்பழத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்!
இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!
தசைப்பிடிப்புகளைத் தவிர்க்கும்:
வாழைப்பழத்தில் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை உடலை நீரேற்றமாகவும் சமநிலையாகவும் வைத்திருக்க உதவும் என்று அவர் கூறுகிறார். உடல் நமது தாதுக்கள் தொடர்பான சமநிலையை இழக்கும் போது, தசைப்பிடிப்பு போன்ற எதிர்மறையான பக்க விளைவுகளை நாம் அனுபவிக்க ஆரம்பிக்கலாம். எனவே, தினசரி வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது இவை எல்லாவற்றையும் சமன் செய்யும்.
உடலில் உப்பை சமப்படுத்த உதவும்:
சமையல் கல்வி நிறுவனம் ஒன்றின் ஊட்டச்சத்து இயக்குநர் எலைன் பீட்ச்மேன் கூறுகையில், வாழைப்பழங்கள் அறியப்பட்ட பொட்டாசியம் அளவுகள் ஒட்டுமொத்த உணவு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை என்று விளக்குகிறார். வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். இது சோடியத்தின் எதிர் விளைவுகளை எதிர்த்துப் போராட உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது என்று அவர் கூறுகிறார். மருத்துவர் சுன் டாங் கூறுகையில், பொட்டாசியத்தின் நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்- உங்கள் உணவில் நல்ல பொட்டாசியம் இருப்பது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் இரத்த அழுத்தத்திற்கும் சிறந்தது, பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க வாழைப்பழம் உதவுகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!
உடல் எடையை குறைக்க உதவும்:
மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழங்கள் அதிக சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் கொண்ட ஒரு பழமாகும். இருப்பினும், ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்க காரணத்தினால், இப்பழம் உண்மையில் நம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பல மருத்துவர்களும் இதனை ஆதரிக்கின்றனர். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை மெதுவாக்கி உங்களை நீண்ட நேரம் முழுதாக உணர வைப்பது மட்டுமின்றி உங்கள் குடல் இயக்கங்களை சீராக்குகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.