நமது வீடுகளில் உள்ள சில உணவுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். குறிப்பாக சமையலறையில் உள்ள உணவு பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதே போன்று இவை உடல் மற்றும் மன அரோக்கியத்தை முழுவதுமாக சீராக்க உதவுகிறது. தினசரி சாப்பிடக் கூடிய உணவுகளில் இந்த வகையான உணவுகள் அவசியம் இடம்பெற வேண்டும். இந்த பதிவில் சமையலறையிலேயே இருக்கும் மிகவும் சத்தான உணவு வகைகள் பற்றி பார்ப்போம்.
நட்ஸ்:
உடலில் ஆற்றலை அதிகரிக்க நட்ஸ் பெரிதும் உதவும். ஒரு சில நட்ஸ் வகைகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதை காலை உணவு அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். நொறுக்குத்தீனியாகவும் அல்லது உணவுக்கு இடைகளிலும் சாப்பிடலாம். சில நட்ஸ் வகைகள் உடலுக்கு வலுவூட்டுகின்றன.
இதையும் படிங்க | வெங்காயத்தின் இந்த 5 நன்மைகளை தெரிந்துகொண்டால் இனி உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!
வெல்லம்:
சர்க்கரை போன்ற இனிப்பு வகைகளை தவிர்த்து வெல்லத்தைப் பயன்படுத்தலாம். வெல்லம் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் போதுமான அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதை அப்படியே கூட சாப்பிடலாம். அல்லது உணவிலும் கலந்து சாப்பிட்டு வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இது முழு உடலையும் சுத்தப்படுத்த உதவும். குறிப்பாக கல்லீரல் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்புகளை வெல்லம் கொண்டுள்ளது.
ராகி:
பொதுவாக தென்னிந்திய பகுதிகளில் ராகி அதிகம் சாப்பிட கூடிய உணவு. இதில் அதிக புரதச்சத்து, வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும், இது முடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது. ராகி அல்லது கேழ்வரகை பலவிதங்களில் சமைத்து சாப்பிடலாம். ராகியை காலை உணவாக சாப்பிடுவது அந்த நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும். இது நரம்புகளைத் தளர்த்தவும் இயற்கையாகவே தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதையும் படிங்க | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!
பேரீச்சம் பழம்:
வெல்லத்தை போன்று சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள மற்றொரு உணவு பேரீச்சம்பழம் ஆகும். இதில் பொட்டாசியம், ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பினாலிக் அமிலம் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளன. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை உணவுகளில் அவசியம் சேர்த்துக் கொள்ளலாம். இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களும் பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
தேங்காய்:
தேங்காய் தண்ணீர், பச்சை தேங்காய், தேங்காய் பால் அல்லது தேங்காய் எண்ணெயில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் மாங்கனீசு முதல் மெக்னீசியம் வரை, மற்றும் தாமிரம் முதல் பொட்டாசியம் வரை மற்ற உணவுகளில் உள்ள பல சத்துக்கள் உள்ளன. தேங்காய் நீரைப் (அல்லது இளநீர்) பருகுவது மன பதட்டத்தைக் குறைக்கும் மன அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மற்ற எண்ணெய்களை காட்டிலும் தேங்காய் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியமானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Food, Healthy Life