கொரோனா அச்சுறுத்தல்: ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது சரியா..? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

உலக சுகாதார அமைப்பு வைரஸால் பாதிக்கப்பட்டவர் மூலம் உணவு, மளிகைப் பொருட்கள், சந்தைப் பொருட்களில் பரவும் அபாயம் குறைவு என்று கூறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது சரியா..? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது சரியா..?
  • Share this:
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப்ஸ்தான். ருசி, வேலைக்குச் செல்லும் தம்பதிகள், இல்லத்தரசிகளுக்கு ஓய்வு, பேச்சுலர்ஸ் என பலருக்கும் பலவகைகளில் இந்த ஆன்லைன் உணவு சந்தை பேருதவியாக இருக்கிறது.

இருப்பினும் தற்போதைய கொரோனா லாக்டவுன் சமையத்தில் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்வது சரியா..?

தற்போது வரை இருக்கும் நல்ல செய்தி உணவு மூலமாகவோ அல்லது உணவு டெலிவரி செய்ததன் மூலமாகவோ கொரோனா தொற்று இல்லை என்பதுதான். இதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் உறுதி செய்துள்ளது.


அதேபோல் உலக சுகாதார அமைப்பும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் மூலம் உணவு, மளிகைப் பொருட்கள், சந்தைப் பொருட்களில் பரவும் அபாயம் குறைவு என்று கூறியுள்ளது. இருப்பினும் நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். எவ்வாறு..?உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் நோய் தொற்று பரவலைத் தடுக்க எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.’நான் ஸ்டிக்’ பாத்திரங்கள் ஆபத்தா..? பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

டெலிவரி செய்யும் நபர் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுகிறார் என்பதையும் கவனித்தல் அவசியம்.

உணவுகளை ஆர்டர் செய்யும்முன் ஆஃபர் தருகிறார்கள் என குழியில் விழாமல் நம்பகத்தன்மை மிக்க உணவகங்களிலும், நீங்கள் அடிக்கடி ஆர்டர் செய்யும் உணவகங்களில் மட்டும் ஆர்டர் செய்யுங்கள்.

உணவகங்களே நேரடியாக உணவை ஆர்டர் செய்கிறதெனில் அந்த வழியைப் பின்பற்றுங்கள். உணவகத்திற்கு நேரடியாகவே தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம்.

நாவூறும் சுவையில் காஷ்மீர் ஸ்டைல் காலிஃப்ளவர் சிவப்பு குழம்பு..!

சுகாதாரம் மிக மிக அவசியம். கொண்டு வரும் உணவு சரியாக பேக்கிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும். பிளாஸ்டிக் டப்பாக்களில் வரும் உணவு ஆர்டர்களை தவிர்த்திடுங்கள். உணவு சாப்பிடும் முன்பும் , பின்பும் கைகளைக் கழுவுதல் அவசியம்.

பார்க்க : 

 

 
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading