நீரழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. ‘இன்சுலின்’ எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம் ஆகும். இன்சுலின் சுரப்பைத் தடுப்பதற்கென பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரழிவு நோய் உருவாவதற்கு முன்பே இன்சுலின் நம் உடலில் காணப்படுகின்றன.
பின்னொரு நாளில் நீரழிவு நோய் வருவதை இன்சுலின் சுரப்பு தூண்டுகின்றது. பொதுவாக பலரும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குறித்து தவறான எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள். இதுவே பல ஆபத்துக்களை உண்டாக்குகிறது. மருந்துகள், உணவுமுறை, உடற்பயிற்சி என சரியான வழிமுறைகளை பின்பற்றி தடுக்கலாம். நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பார்க்கலாம்.
உடற்பயிற்சி:
உடல், மனம் போன்றவைகள் தான் ஒருவருடைய வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரழிவு பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடற்பயிற்சி தவறாமல் மேற்கொள்ள வேண்டும். நாம் வீட்டில் நிறைய நடக்கிறோம், வீட்டு வேலைகளை செய்கிறோம். இதுவே போதும், உடற்பயிற்சி தேவையில்லை என்று பலரும் நினைக்கின்றனர்.இது தவறான எண்ணமாகும். உடற்பயிற்சி என்பது வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை கொடுப்பது ஆகும். வளைந்து கொடுக்கும் தன்மைக்கு யோகா, தசைகளை உருவாக்க எடை எதிர்ப்பை உண்டாக்கும் பயிற்சிகள் மற்றும் சகிப்புத்தன்மைக்கு கார்டியோ அடிப்படையிலான பயிற்சிகள் போன்றவற்றை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!
உற்சாகமாக இருத்தல்:
தினமும் உடற்பயிற்சி செய்வதால் நமது உடலும், மனமும் சுறுசுறுப்பாகவும்,உற்சாகமாகவும் காணப்படும். நீரழிவு நோயை நிர்வகிப்பதில் உடலின் தசைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தசைகள் வளர சில மாதங்கள் எடுக்கும். அதற்கு தேவையான பயிற்சிகளை எடுப்பதும் அவசியம்.
சரியான நேரம்:
நமது உடலில் ஒரு உயிரியல் கடிகாரம் என்று கூறப்படுகிறது. இதில் ‘சர்க்காடியன்’ என்ற ரிதம் உள்ளது. இதுதான் நம்முடைய உடலின் அனைத்து வகையான செயல்பாடுகள் மற்றும் தூக்கத்தின் நேரத்தை உறுதி செய்கிறது. எனவே எல்லா நேரங்களிலும் உடல் பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது அல்ல. சரியான நேரத்தில் செய்வது முக்கியம் ஆகும்.
பயிற்சியாளர் அவசியம்:
உடற்பயிற்சி செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறு, உடற்பயிற்சிகளை சரியாக செய்யாமல் இருப்பது ஆகும். சரியான வடிவத்தில், முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உடலில் தேவையில்லாத அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஓய்வு தேவை:
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வது சிறந்த விஷயமாகும். ஆனால், உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.ஒவ்வொரு உடல் பயிற்சிக்கும் பிறகு சரியான ஓய்வு உடலுக்கு தேவைப்படுகிறது.
நவீன எடை இயந்திரங்கள்:
உடல் பயிற்சி செய்பவர்கள் நவீன எடை இயந்திரங்களை வைத்திருப்பது அவசியம் ஆகும். ‘Body Composition Machine’ என்று அழைக்கப்படும் இந்த இயந்திரங்கள் பிஎம்ஐ, பிஎம்ஆர், உடல் கொழுப்பு, தசைகள் போன்றவற்றின் எடையை கணக்கிடுகிறது.
இதையும் படிங்க | டைப் 2 நீரிழிவு நோயாளிகள்: உணவு விஷயத்தில் அலர்ட் தேவை!
கண்காணிப்பு:
சர்க்கரை அளவைக் கண்காணிக்காமல் இருந்தால் அது பல்வேறு ஆபத்துகளை உண்டாக்கும். உடலில் சர்க்கரை அளவு ஆனது ஏற்றம், இறக்கமாக மாறும். அதனை கண்காணிப்பது அவசியம் ஆகும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றுக்கு இடையே 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும். சாப்பிட ஆரம்பித்தவுடன் இரண்டு மணிநேரம் வரை உங்கள் பிபி மற்றும் சுகர் அளவினை சரிபார்க்க வேண்டும். அது எடுக்கப்படும் நேரத்தையும் கவனிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க குளுக்கோமீட்டரை பயன்படுத்தலாம். இரத்த சர்க்கரை அளவு குறையும் போது மருத்துவரை அணுக வேண்டும்.
சிகிச்சை முறைகள்:
நீரழிவு நோயின் வகையைப் பொறுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஹோமியோபதி சிகிச்சையை பின்பற்றுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீரழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கவும், குறைவான மருந்துகளை உட்கொள்வதற்கு இந்த சிகிச்சை உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Food, Healthy Life