உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் இந்த பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது!

நீரிழிவு நோய்

தினசரி சில பழங்களை உட்கொள்வது உண்மையில் நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் என்று கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தங்களது சீரான உணவின் ஒரு பகுதியாக பழங்களையும் சாப்பிடுவது மிக அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கலாம். பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சில பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை நிரம்பியுள்ளது.

எனவே நீரிழிவு நோயாளிகள் அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள குறிப்பிட்ட பழங்களை சாப்பிடாமல் இருப்பது மிக நல்லது. உங்கள் உடல் சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டுமானால் சில பழங்களை தவிர்க்க வேண்டும்.

இயற்கையாகவே சர்க்கரை கொண்ட பழ வகைகள், சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட சாக்லேட் வகைகள் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றிற்கு இடையே அதிக வித்தியாசம் உள்ளது. அதற்காக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பவர்கள் பழங்களையே சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. ஒரு நபர் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பழங்களை உணவில் இருந்து விலக்கக்கூடாது. எனவே நீரிழிவு நோயாளி சாப்பிட வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய பழங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

தினசரி சில பழங்களை உட்கொள்வது உண்மையில் நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் என்று கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் பின்வரும் பழங்களை உட்கொள்வதை தவிர்ப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மிக முக்கியம்.கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) ஒரு குறிப்பிட்ட உணவு உட்கொண்ட பிறகு ஒரு நபரின் குளுக்கோஸை எவ்வளவு உயர்த்தும் என்பதைக் குறிக்கிறது. அந்த வகையில் நடுத்தர முதல் உயர் GI கொண்ட நபர்கள் புறக்கணிக்க வேண்டிய சில பழங்கள் இதோ.

1. மாம்பழம்: ஒரு நடுத்தர அளவிலான (Medium-Size) மாம்பழத்தில் சுமார் 40 முதல் 45 கிராம் சர்க்கரை உள்ளது.

2. வாழைப்பழம்: இயற்கையாகவே ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 15 கிராம் சர்க்கரை இருக்கும்.

மிளகுத்தூளை தண்ணீரில் கலந்து 2 டம்ளர் குடித்தால் இத்தனை நன்மைகளா..? நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்...

3. தர்பூசணி: ஒரு நடுத்தர அளவிலான தர்பூசணியில் 7 கிராம் சர்க்கரை உள்ளது.

4. திராட்சை: ஒரு கப் திராட்சையில் 25 கிராம் சர்க்கரை உள்ளது.

5. உலர்ந்த பேரிச்சம்பழம்: இதில் 4.5 கிராம் சர்க்கரை உள்ளது.

6. அன்னாசி: ஒரு கப் அன்னாசி துண்டுகளில் 16.3 கிராம் சர்க்கரை உள்ளது.இதன் காரணமாக, மேற்கண்ட பழங்களை சர்க்கரை நோயாளி தவிர்க்க வேண்டும். குறிப்பாக தங்களது உணவு வேளைக்கு பிறகு. இதுதவிர, என்னென்ன பழங்களை சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவை உயர்த்தாது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

அதன்படி நீரிழிவு நோயாளி அவகேடோ, நாவல் பழம், கிவி பழம், பீச், பேரீச்சம்பழம், பிளம்ஸ் மற்றும் கொய்யா போன்ற பழங்களை உட்கொள்ளும்போது அவை இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். இந்த பழங்கள் அனைத்திலும் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு மற்றும் நீரிழிவு நோயாளி எந்த தயக்கமும் இன்றி உட்கொள்ளலாம். குறைந்த GI மதிப்பெண்களைக் கொண்ட பழங்களின் பெரிய பகுதிகளை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: