Home /News /lifestyle /

தாவர அடிப்படையிலான உணவில் நிபுணர்கள் அங்கீகரிக்கும் 5 சூப்பர் நன்மைகள்!

தாவர அடிப்படையிலான உணவில் நிபுணர்கள் அங்கீகரிக்கும் 5 சூப்பர் நன்மைகள்!

தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது நிச்சயமாக பலருக்கு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகிறது.

தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது நிச்சயமாக பலருக்கு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகிறது.

தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது நிச்சயமாக பலருக்கு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகிறது.

தாவர அடிப்படையிலான உணவுகளால் செறிவூட்டப்பட்ட ஒரு உணவு, நமது வாழ்வை மேம்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புவதையும் இவை உறுதிப்படுத்தும். நாம் ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்யும்போது உணவு எப்படி நம்பமுடியாத அளவிற்கு ஊட்டமளிக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமா? தாவர அடிப்படையிலான உணவுகள் நம் அன்றாட உணவுகளில் தடையின்றி இணைக்கப்பட வேண்டியதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

தாவர அடிப்படையிலான உணவின் 5 நன்மைகள் இங்கே!

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

தாவர அடிப்படையிலான உணவு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவர உணவிற்கு சுவிட்ச் செய்யும் பெரும்பாலான மக்கள் அதை உணர்கிறார்கள். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்து விஷயங்களும் நமக்கு வழங்கும் தாவர உணவுகளில் நிறைந்த நார்ச்சத்துதான் இதற்குக் காரணம். 16 வாரங்கள் சைவ உணவு உட்கொள்வது குடல் நுண்ணுயிரியை எவ்வாறு அதிகரிக்கும் மற்றும் பல நன்மைகளைச் செய்யும் என்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

சிறந்த ஆற்றல் நிலைகளை வழங்கும்:

நாம் அனைவரும் சில நேரங்களில் குறைந்த ஆற்றலை உணர்கிறோம். பேட்டரி குறைவாக இயங்குவதைப் போன்ற உணர்வுக்கு உணவு பங்களிக்கும். இருப்பினும், தாவர அடிப்படையிலான உணவுகள் அதை மேம்படுத்தலாம். இதனால்தான் விளையாட்டு வீரர்கள் கூட தாவர அடிப்படையிலான உணவுகளுக்குத் திரும்புகிறார்கள். F1 பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் சைவ உணவைப் பின்பற்றுகிறார் என்பது நாம் அறிந்தது. அவர் மட்டுமல்ல, பல விளையாட்டு வீரர்களும் திரை பிரபலங்களும் சைவ உணவைதான் உட்கொள்கின்றனர். அது அவர்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும்.

சருமத்தை பராமரிக்கும்:

தாவர அடிப்படையிலான உணவுகள் சுத்தமாக சாப்பிடுவதற்கு உதவுகின்றன. அது உண்மையில் நம் தோலில் வெளிப்படும்! உங்கள் சருமம் பொலிவாக இருக்க கீரையை சாப்பிடுங்கள் என்று நம் பெற்றோர்கள் பல காலமாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 2020 இல் ஒரு விரிவான ஆய்வு தாவர அடிப்படையிலான உணவுகள் நம் உடலில் ஆக்ஸிஜனேற்றங்களின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது. இறுதியில் நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுவே காரணம். இதையே எடுத்துக்காட்டும் இன்னும் பல ஆய்வுகளும் உள்ளன. ஆனால், வித்தியாசமாக சாப்பிடுவதற்கு உங்கள் உடலுக்கு நேரம் கொடுக்க மறக்காதீர்கள். இது ஒரே இரவில் நீங்கள் பார்க்கக்கூடிய விளைவாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்!

இதையும் படிங்க | ஆண்களையும் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்- தெரிந்துகொள்ள வேண்டியவை!

உடல் எடையை நிர்வகிக்க உதவும்:

தாவர அடிப்படையிலான உணவுகள் நார்ச்சத்து நிறைந்தவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், இது நம்மை முழுதாக இருக்க உதவுவது மட்டுமின்றி உடல் எடையையும் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. 2020ஆம் ஆண்டின் ஆராய்ச்சியில், தாவர அடிப்படையிலான உணவுக்கு மக்களை மாற்றியமைத்த 19 ஆய்வுகளில், ஒவ்வொரு அறிக்கையும் உடல் எடை குறைப்பைக் குறிப்பிடுகின்றன.

நல்ல தூக்கத்தைப் பெற உதவும்:

தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது நிச்சயமாக பலருக்கு நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகிறது. ஓரளவிற்கு, ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு நல்ல இரவு தூக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். உங்கள் வயிறு வீங்கியிருப்பதாக நீங்கள் பொதுவாக உணர்ந்தால் அல்லது உணவுக்குப் பிறகு அடிக்கடி தூக்கம் வந்தால், அவை சுத்தமாக சாப்பிடத் தொடங்குவதற்கான அறிகுறியாகும். எனவே, தாவர அடிப்படையிலான உணவுகளே அதற்கு முதல் தீர்வு!
Published by:Archana R
First published:

Tags: Healthy Lifestyle, Plants, Vegetables

அடுத்த செய்தி