• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்வதால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்வதால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

உடல் எடை இழப்பு முதல் நாட்பட்ட நோயின் அறிகுறிகளை எதிர்த்து போராடுவது என பல நன்மைகளை கொண்ட இன்டெர்மிட்டென்ட் விரத பழக்கம் மக்களிடையே குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழ் பெற்றுள்ளது என்று கூறலாம்.

  • Share this:
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது ஒரு டயட் உணவு திட்டமாகும். தற்போது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் இந்த உணவு திட்டம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. விரதம் இருக்கும் நேரம் மற்றும் உண்ணும் காலத்திற்கு இடையில் மாறும் உணவுப் பழக்கம் என பல நிரூபிக்கப்பட்ட உடல்நலன் சார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த செயல்முறையில் ஒருவர் 12 முதல் 18 மணி நேரம் வரை நீண்ட நேரத்திற்கு உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த செயல்முறை எடையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைகிறது. மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்பு முதல் நாட்பட்ட நோயின் அறிகுறிகளை எதிர்த்து போராடுவது என பல நன்மைகளை கொண்ட இந்த விரத பழக்கம் மக்களிடையே குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழ் பெற்றுள்ளது என்று கூறலாம். அதேபோல, இந்த உணவு திட்டம் அதன் அனைத்து நன்மைகளுடனும், சில சாத்தியமான குறைபாடுகளும் உள்ளன. இதனை கடைபிடிப்பது பாதுகாப்பானது என்றாலும், இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். அதிலும் குறிப்பதாக இந்த இடைவிடாத உண்ணாவிரதம் அனைவருக்கும் பொருந்தாது. சரி இந்த விரத முறையை பின்பற்றும்போது ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

தலைவலி: நீண்ட உண்ணாவிரதம் எடுப்பது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இதனால் ஒருவருக்கு தலைவலி ஏற்படலாம், அல்லது மயக்கம் ஏற்படலாம். இது ஆரம்ப வாரம் அல்லது இரண்டு நாட்களில் மிகவும் பொதுவானதாக இருக்கும். செரிமான பிரச்சனைகள்: உண்ணும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உணவு உட்கொள்வதைக் குறைப்பது சில நேரங்களில் செரிமானத்தை பாதிக்கும். குமட்டல், வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்கலாம்.

அடிக்கடி மனநிலை மாற்றங்கள்: இந்த உண்ணாவிரத நடைமுறையின் போது குறையும் இரத்த சர்க்கரை அளவு மற்றும் பசி வேதனைகள் ஒருவரின் மனநிலையை பாதிக்கும். விரத சமயத்தில் ஏற்படும் எரிச்சல், பதட்டம் மற்றும் மோசமான செறிவு ஆகியவை உங்களின் மனநிலையை தாக்கும். துர்நாற்றம்: அசாதாரண பக்க விளைவுகளாக சிலர் சுவாச பிரச்சனைகளை அனுபவிக்கலாம்.

Must Read | வந்துவிட்டது மழைக்காலம்… சளி, காய்ச்சலில் இருந்து தப்பிக்க தயாரா? கைட்லைன்ஸ் இதோ!

தூக்க பிரச்சனைகள்: உணவைப் பின்பற்றுபவர்கள் சில தூக்கப் பிரச்சனைகளை அனுபவிக்க முடியும். உங்களுக்கு ஒழுங்கற்ற உணவு-உண்ணாவிரத நேரங்கள் இருந்தால், தூக்கக் கலக்கம் கூட ஏற்படலாம். மேலும் உடல்சோர்வு ஏற்படும்.

அதிகரித்த குறைபாடுகள்: போதிய ஊட்டச்சத்து மற்றும் மோசமான கூடுதல் குறைபாடுகள் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கலோரி-கட்டுப்பாட்டு வரம்புகளை மிகைப்படுத்துதல் மோசமாக இருக்கும்.

இந்த ஃபாஸ்ட்டிங்கை யாரெல்லாம் பின்பற்றக்கூடாது? இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் ஒருவர் உடல் எடையை குறைக்க உதவும். எனவே கர்ப்பிணி பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், உணவுக் கோளாறுகளின் வரலாறு உள்ளவர்கள், பதின்வயதினர், நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்கள், வகை 1 நீரிழிவு நோயாளிகள், பிற மருத்துவ பிரச்சனைகள் உள்ளவர்கள், எடை குறைந்தவர்கள் அல்லது வயதானவர்கள் இந்த உணவை முயற்சிக்கக்கூடாது. அதிலும், இடைவிடாத விரதத்தின் போது, ​​நீர், காபி போன்ற ஜீரோ கலோரி பானங்களை நீங்கள் குடிக்கலாம். காபி உட்கொள்வது கூட ஒரு வலுவான பசியை அடக்கும் மருந்தாக இருப்பதால் இந்த விரதத்தின் பொது குடிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: