ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடுகிறீர்களா..? உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறது..!

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடுகிறீர்களா..? உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறது..!

அரிசி சாதம்

அரிசி சாதம்

அதுமட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் நார்சத்து மிக மிக குறைவான அளவு இருக்கிறது. ஜீரோ கலோரி என்று சர்க்கரையை கூறுவார்கள். அதேபோல சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் அதிகமாக சாப்பிடும்போது உடலுக்கு எந்த ஊட்டச்சத்துமே இல்லாமல் கலோரிகளை மட்டுமே உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக இதய நோய்கள் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. குறிப்பாக இளம்வயதினர் மாரடைப்பு, இதயம் வால்வு கோளாறு, இதய தசைகள் பாதிப்பு என்று பலவிதமான இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது தான் இதற்கு முக்கியமான காரணம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதில் நம்முடைய வழக்கப்படி வெள்ளை அரிசி அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அரிசியை சாதமாக மட்டுமல்லாமல் சிற்றுண்டிக்கும் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதால், தினசரி உட்கொள்ளக்கூடிய அளவு அதிகமாக இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட அரிசி சாதத்தை அதிகம் சாப்பிட்டால் இதயத்திற்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால் இதய நோய்களுக்கான ஆபத்து எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஆய்வு முடிவு டெய்லி மெயில் என்ற ஜர்னலில் வெளியாகியது. இந்தியாவில் அரிசியைப் போல வெளிநாடுகளில் இப்பொழுது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஹாலோவீன் என்ற கொண்டாட்டத்தில் அதிகமாக கார்போஹைட்ரேட் இருக்கும் இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இங்கு அரிசி சாப்பிடுவது எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்துகிறதோ அதே போன்ற பாதிப்பைத்தான் இனிப்புகளை அதிகமாக சாப்பிடும் வெளிநாட்டவர்களுக்கும் ஏற்படுகிறது என்பதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு மற்றும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அளவை குறைக்கவேண்டும். குறிப்பாக அரிசி சாதத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளது.

அரிசி சாதம் சாப்பிடுவது எவ்வாறு இதயத்தை பாதிக்கிறது?

வெள்ளை நிற உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பல முறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இதய மருத்துவர்கள் சர்க்கரை தான் இதயத்திற்கு முதல் எதிரி என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதே அளவுக்கு அரிசியும் இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமாக மாறி இருக்கிறது என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் நிச்சயமாக ரசாயனங்களின் சேர்க்கை இருக்கும், ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அரிசி மிகவும் எளிதாக ஜீரணமாகும் ஒரு உணவு. சுவையான சாதத்துடன் பலவிதமான குழம்பு, காய்கறி, பொறித்த உணவுகள், சிப்ஸ் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நமக்கு தெரியாது.

ஒரு பெரிய பவுல் நிறைய காய்கறி சாலட்டுகள் அல்லது பழங்களை சாப்பிடுவதைவிட அதே அளவுக்கு அரிசி சாதம் சாப்பிடும்போது நீங்கள் உட்கொள்ளும் உணவின் கலோரிகள் மிக மிக அதிகம். பொறித்த, வறுத்த உணவுகளை சேர்க்கும்போது கொழுப்பு சேர்ந்து விடுகிறது. அதிகளவு அரிசி சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவுக்கு உடலுழைப்பு இல்லாத காரணத்தால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து இதயத்தை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க இதய அமைப்பு மற்றும் கார்டியாலஜி கல்லூரி, சுத்திகரிக்கப்பட்ட அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஏற்படும் அபாயம் மிக அதிக அளவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

Also Read : சூடான வடித்த சாதத்தை விட பழைய சாதம் ஆரோக்கியமானதா.? நிபுணர்களின் கருத்து.!

 அதுமட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் நார்சத்து மிக மிக குறைவான அளவு இருக்கிறது. ஜீரோ கலோரி என்று சர்க்கரையை கூறுவார்கள். அதேபோல சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் அதிகமாக சாப்பிடும்போது உடலுக்கு எந்த ஊட்டச்சத்துமே இல்லாமல் கலோரிகளை மட்டுமே உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அரிசியில் இருக்கும் ரசாயனங்கள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது. இவை அனைத்துமே பலவிதங்களில் தீவிரமாக உடலை பாதிக்கும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Boiled rice, Cooked Rice Benefits, Heart health