முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முடி உதிர்வை இந்த சிம்பிள் டிப்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம்!

குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முடி உதிர்வை இந்த சிம்பிள் டிப்ஸ் மூலம் கட்டுப்படுத்தலாம்!

கர்ப்ப காலத்திலும் சரி குழந்தை பிறந்த பிறகும் சரி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்திலும் சரி குழந்தை பிறந்த பிறகும் சரி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்திலும் சரி குழந்தை பிறந்த பிறகும் சரி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

குழந்தை பிறப்புக்குப் பிறகு, எல்லா பெண்களுக்கும் உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஹார்மோன்களின் ஏற்ற இரக்கங்களின் உற்பத்தி காரணமாக, குழந்தை பிறந்த சில வாரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுவது தான்.

குழந்தை பிறப்பு மிகவும் சவாலானது தான். பிறகு சில வாரங்கள் வரை குழந்தை வளர்ப்பு அதைவிட சவாலானது. குழந்தை தூங்கும் போது தூங்கி, கிட்டத்தட்ட இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டிய சூழ்நிலை, குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற கவலை மற்றும் பயம் ஆகியவை உடல் மற்றும் மனதை பாதிக்கக்கூடும். அது மட்டுமின்றி, பெண்களுக்கு உரித்தான ஹார்மோன் மாற்றங்களும் அதிகமாக முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில், முடி வளர்ச்சி அதிகமாகக் முடி கொட்டுவது குறைவாக இருக்கும். குழந்தை பிறந்த பிறகு ரெஸ்ட்டிங் நிலைக்கு செல்லும், அதன் பிறகு, புதிதாக முடி வளரத்துவங்கும் போது, ஏற்கனவே உள்ள முடி கொட்டும்.

அதிகப்படியாக சுரக்கும் ப்ரோஜஸ்டரோன் ஹார்மோன் மற்றும் குறைந்திருக்கும் ஈஸ்ட்ரஜன் ஹார்மோனும், முடியை ரெஸ்ட்டிக் நிலைக்கு கொண்டு செல்கிறது. புதிதாக முடி வளரும் பொது, ரெஸ்டிங் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் முடி உதிரத் தொடங்கும். இது குழந்தை பிறந்த பிறகு மூன்று மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை நடக்கலாம்.

சரியான காரணங்களுக்காக உங்கள் அழகான ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வரட்சியான கூந்தலாக மாறலாம். ஆனால் இவையெல்லாம் தற்காலிகம் தான். உங்கள் உடலில் ஹார்மோன் உற்பத்தி மீண்டும் சீராக மாறும்போது முடி உதிர்தல் குறைந்து உங்களுக்கு முடி வளர்ச்சி அதிகமாகும். அது மட்டுமின்றி, ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பிறந்த பிறகு ஹார்மோன்கள் எப்பொழுது சீராக உற்பத்தியாகத் தொடங்கும் என்பதும் மாறுபடும். இடைப்பட்ட காலத்தில் உங்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்த நீங்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள் உண்பது:

கர்ப்ப காலத்திலும் சரி குழந்தை பிறந்த பிறகும் சரி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உங்கள் ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்களை அதிகமாக உண்ணுவது உங்கள் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொடுத்து, முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

Must Read | இனி மழைக்காலம்… உங்க கார பத்திரமா பாத்துங்கோங்க!! இதோ சில டிப்ஸ்..!

முடியை சுத்தமாக பராமரிக்கவும்:

குழந்தை பிறந்த பிறகு பெண்ணுக்கு சளி அல்லது காய்ச்சல் வராமல் பாதுகாப்பதற்காக சில வழி முறைகள் மேற்கொள்ளப்படும். தாய்க்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டால் அது குழந்தையையும் பாதிக்கக்கூடும் என்பதால் அதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றில் அடிக்கடி தலைக்கு குளிக்கக் கூடாது, அல்லது குளிர்ச்சியான உணவுகளை உண்ண கூடாது ஆகியவையும் அடங்கும். இருப்பினும், போதிய இடைவெளியில் அவ்வப்போது ஆன்டி-ஹேர் லாஸ் ஷாம்பு பயன்படுத்தி உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வது முடி உதிர்வைக் குறைக்க உதவும்.

வைட்டமின் சப்ளிமென்ட்கள்:

எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் சில பெண்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி சப்ளிமெண்ட்ளை எடுத்துக்கொள்ளலாம்.

கெமிக்கல் சிகிச்சைகளை தவிருங்கள்:

பொதுவாகவே முடிக்கு கலரிங் செய்வது, ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது, கெமிக்கல் சிகிச்சை அளிப்பது ஆகியவை முடி உதிர்வுக்கு காரணமாக அமையும். எனவே நீங்கள் குழந்தை பெற்ற பிறகு சிறிது காலம் வரை முடிக்கு எந்தவிதமான கெமிக்கல் சிகிச்சையையும் தர வேண்டாம்.

First published:

Tags: Hair fall, Healthy Food, New Mom