பருவ மாற்றம் மற்றும் மழை நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து ஃப்ளு மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு ஊட்டமளிக்கும் வகையில், பருவத்திற்கு ஏற்ப டயட்டை மாற்றியமைக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். நமது வீட்டு கிச்சனில் மிகவும் பொதுவாக காணப்படும் பல மசாலா பொருட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. அப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு அற்புத மசாலா தான் மஞ்சள்.
பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் நிறைந்துள்ளன. மஞ்சள் கலந்த டீ பருவமழைக்காலத்தில் பல நன்மைகளை செய்கிறது.
மஞ்சள் டீ (Haldi Chai) செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மஞ்சள், இஞ்சி, கருமிளகு, தேன்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து தேன் தவிர அனைத்து பொருட்களையும் அதில் சேர்க்கவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்றாக கொதிக்க வைத்து, அடுப்பிலிருந்து இறக்கி சிறிது தேனுடன் சூடாக குடிக்கலாம். அது போல மஞ்சள் ஒருநாளைக்கு ஒரு டீஸ்பூன் மட்டுமே சாப்பிட நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் மஞ்சள் டீ தரும் ஆரோக்கிய நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
ஹீலிங் பண்புகளை கொண்ட பண்டைய இந்திய மசாலாவாக உலகளவில் பிரபலமாக உள்ளது மஞ்சள். இதில் காணப்படும் குர்குமின் என்ற கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை தடுக்க உதவுகிறது.
தூதுவளை துவையல் எப்படி செய்யனும் தெரியுமா..? சளி , இருமலுக்கு நல்லது..!
சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவும்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, குர்குமின் டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. பருவமழை காலத்தில் சளி மற்றும் காய்ச்சலை தடுக்க உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற மூலக்கூறான லிப்போபோலிசாக்கரைடு மஞ்சளில் அடங்கி உள்ளது.
பருவமழை தொடங்கிருச்சு... கூடவே சளி, காய்ச்சலும் பாடாய்படுத்துதா..? நிவாரணம் தரும் 3 உணவுகள்
அஜீரணம் வராமல் தடுக்கிறது:
மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் வளர்சிதை மாற்றத்தை மேலும் ஊக்குவிக்கிறது. அஜீரணத்தை தடுக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் உணவுக்குழாய் அழற்சியைத் தடுக்கிறது, அசிடிட்டி, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றையும் தடுக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
மஞ்சள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தவிர இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் digestive health agents-களாக செயல்பட்டு குடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன.
உடல் எடை குறையவில்லையா..? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
கல்லீரல் ஆரோக்கியம்:
கல்லீரல் ஆரோக்கியத்தில் அதிசயங்களை செய்வதாக மஞ்சள் அறியப்படுகிறது. மஞ்சள் நமது ரத்தத்தை நச்சுத்தன்மையடையச் செய்யும் முக்கிய நொதிகளின் உற்பத்தியை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. அதாவது உடலில் இருந்து உணவு நச்சுகளை வெளியேற்றும் என்சைம்களை அதிகரிக்க உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Herbal Tea, Monsoon