ச்ன்நம் வீடுகளில் மிச்சம் ஆன இட்லியில் உப்புமா செய்வது தான் வழக்கம். ரவா உப்புமாவை விட இட்லி உப்புமா குழந்தைகளுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி பிடித்தமான ஒன்று. ஈஸியாகவும் செய்ய கூடியது. அந்த வகையில் இன்று இட்லியை வைத்து இன்னொரு வெரைட்டியான ஸ்நேக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். அதன் பெயர் இட்லி பஜ்ஜி. இந்த இட்லி பஜ்ஜி ரெசிபியை செய்து காட்டி இருப்பவர் யூடியூப் பிரபலம் ஹேமா. இவரது ஹேமாஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் இட்லி பஜ்ஜி ரெசிபி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இவரது பல ரெசிபி வீடியோக்கள் இதுவரை லட்சக்கணக்கான யூடியூப் ரசிகர்களால் லைக்ஸ்களை வாரி குவித்துள்ளது.
இப்போது இந்த இட்லி பஜ்ஜி செய்முறை மற்றும் தேவையான பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் ;
வேக வைத்த இட்லி, உருளை கிழங்கு, மிளகாய் தூள், வெங்காயம், சீரகம், பஜ்ஜி மாவு, அரிசி மாவு, எண்ணெய், உப்பு
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இதையும் படிங்க.. டெசர்ட் வகைகளை விரும்பி சாப்பிடுவீங்களா..? அப்போ இந்த சேமியா கஸ்டர்ட் உங்களுக்கு பிடிக்கும்...
பின்பு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த கலவையை வடை போல் தட்டி கொள்ள வேண்டும்.
இப்போது வேக வைத்த
இட்லியை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும். அதன் நடுவில் வடை போல் தட்டிய மசாலாவை வைக்க வேண்டும்.
பின்பு அகலமான பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க.. வெந்தய கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி?
இப்போது பஜ்ஜி கலவையில், ஸ்டஃப் செய்த இட்லியை போட்டு முக்கி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான இட்லி பஜ்ஜி ரெடி.
மாலை நேரத்தில் டீயுடன் இந்த
இட்லி பஜ்ஜியை சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.