காலை எழுந்தவுடன் நம்மில் பலருக்கு ஆற்றல் மற்றும் உற்சாக பானமாக இருக்கிறது டீ. உடல் மனதும் புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக இயங்க வைப்பதால் பலரும் டீ பிரியர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக அலுவலகத்தில் வேலைக்கு நடுவே டென்ஷனை குறைக்கவும், குழப்பமாக இருக்கும் மனதை தெளிவாக யோசிக்க வைக்கவும் பலரும் டீ குடிப்பதை விரும்புகிறார்கள். பரபரப்பான மெஷின் வாழ்க்கைக்கு நடுவே பலரும் ஸ்ட்ரெஸ் மற்றும் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.
தலைவலியில் பல வகைகள் உள்ளன. டென்ஷன் தலைவலி லேசானது முதல் மிதமான வலியை தலையின் இரு பக்கத்திலும் ஏற்படுத்தும் நிலையில் ஒற்றை தலைவலி மிதமானது முதல் கடும் வலியை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு எந்த வகையான தலைவலி இருந்தாலும் சூடாக ஒரு கப் டீ குடிப்பது வலியிலிருத்து நிவாரணம் தருவதோடு, மனஅழுத்தத்தை போக்கி டென்ஷனையும் குறைக்கிறது.
Read More : சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!
தலைவலியை போக்கும் டீ ரெசிபி...
தேவையான பொருட்கள்:
- 2 கப் தண்ணீர்
- 1 இன்ச் அளவிலான இஞ்சி
- சிறிதளவு துளசி இலைகள்
- 1 டீஸ்பூன் அளவு பெருஞ்சீரகம்
- பெப்பர்மின்ட் இலைகள்
- ½ டீஸ்பூன் கெமோமில்
- தேவையான அளவு தேன்
செய்முறை:
முதலில் 2 கப் தண்ணீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதில் இஞ்சியை நசுக்கி போட்டு அடுப்பை பற்ற வைக்கவும். இதோடு சிறிதளவு துளசி இலைகளை போட்டு காய்ச்சவும். நன்கு கொதித்த பின் சில நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைத்து விட்டு, வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் இந்த கலவையோடு எடுத்து வைத்துள்ள பெருஞ்சீரகம், பெப்பர்மின்ட் இலைகள் மற்றும் கெமோமில் (chamomile) சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். சுவைக்காக சிறிதளவு தேனை இதனுடன் சேர்த்து பருகலாம்.
எப்படி குணப்படுத்தும்.?
இந்த டீயில் பயன்படுத்தப்படும் இஞ்சி மற்றும் கெமோமில் நரம்பு மண்டலத்தை தளர்த்த, வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளன. அது மட்டுமின்றி இந்த டீயில் இருக்கும் துளசி மற்றும் கெமோமில் பதற்றத்தை குறைக்கவும், சீசனல் அலர்ஜிகளை குணப்படுத்தவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் சேர்க்கப்படும் பெருஞ்சீரகம் உப்பசம் மற்றும் செரிமானத்தால் ஏற்படும் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.