உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கீங்களா ? ஆரோக்கியமான வெயிட் லாஸ் சாலட் ரெசிபி இதோ..

காட்சி படம்

உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கீங்களா ? அப்ப இந்த சாலட் சாப்பிடுங்க..

 • Share this:
  உடல் எடையை குறைக்க நினைப்போர் வயிறு நிறைய சாப்பிடுவதை விட ஹெல்தியாக சாப்பிடுவதுதான் அவர்களுடைய டயட்டாக இருக்கும். அப்படி நீங்களும் டயட் பின்பற்றுகிறீர்கள் எனில் உங்களுக்கான ரெசிபிதான் இது.

  தேவையான பொருட்கள் :

  கேரட் - 2
  சின்ன வெங்காயம் - 5
  பச்சை மிளகாய் - 1
  தக்காளி - 1
  குடைமிளகாய் - 1/2
  கொத்தமல்லி - சிறிதளவு
  சர்க்கரைவல்லி கிழங்கு - 1
  இஞ்சி - சிறு துண்டு
  பூண்டு - 2
  கொண்டை கடலை - 1கப்
  எலுமிச்சை - 1/2
  சீரகப்பொடி - 1/2 tsp
  உப்பு - தே.அ
  சாட் மசலா - 1 tsp
  வினிகர் - 2 tsp
  மிளகு தூள் - 1/2 tsp
  தயிர் - 2 tsp

  செய்முறை :

  கேரட்டை சீவிக்கொள்ளுங்கள். வெங்காயம் , தக்காளி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

  இறுதியாக பவுள் ஒன்றில் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் போட்டு இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் ஆரோக்கியமான வெயிட் லாஸ் சாலட் தயார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: