Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வேர்க்கடலை ஸ்னாக்ஸ் ரெசிபிகள்!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வேர்க்கடலை ஸ்னாக்ஸ் ரெசிபிகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Healthy Snacks | வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது மற்றும் சுவையானதாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாலை நேர தேநீர் வேளையில் தேநீருடன் சுவைக்க பக்கோடா, வடை, பஜ்ஜி போன்றவை இல்லை என்றால் தேநீர் நேரம் முழுமையடையாது. தினமும் ஒரே தின்பண்டம் சாப்பிட்டு போரடித்தால் நீங்கள் வேர்க்கடலையை வைத்து செய்யும் சுவையான ரெசிபிக்களை முயற்சி செய்யலாம்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது மற்றும் சுவையானதாக உள்ளது.

    மசாலா வேர்க்கடலை :

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1/2 கப்
    வேர்க்கடலை - 1 கப்
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கேசரி கலர் பவுடர் - 3/4 ஸ்பூன்
    கருவேப்பிலை, பூண்டு - தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் ஒரு பவுலில் கடலை மாவு மற்றும் அரசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் கேசரி கலர் பவுடரை தண்ணீரில் கலந்து சேர்க்கவும். பின்னர் இந்த கலவையில் வேர்கடலையை சேர்த்து பிசறி வைக்கவும். ஒரு வாணலில் எண்ணெய்யை காய வைத்து வேர்கடலையை உதிரிஉதிராக போட்டு பொரித்து எடுக்கவும். இறுதியாக கருவேப்பிலை, மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து வறுத்து வேர்க்கடலையுடன் சேர்க்கவும். சுவையான மசாலா வேர்க்கடலை தயார்.

    Read More : குழந்தைகள் உயரமாக வளர என்னென்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?


    வேர்க்கடலை சுண்டல் :

    தேவையான பொருள் :

    வேர்க்கடலை - 1 கப்
    கருவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு

    செய்முறை :

    வேர்க்கடலையை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும். வாணலில் எண்ணெய் சேர்த்து காய வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இறுதியை சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

    சீஸ் வேர்க்கடலை :

    தேவையான அளவு :

    சீஸ் (துருவியது) - 1 கப்
    வேர்க்கடலை - 2 கப்
    ஆலிவ் எண்ணெய் - 3 ஸ்பூன்
    தாளிக்க - சீரகம், கடுகு
    சிவப்பு மிளகு - 1 ஸ்பூன்
    சாட் மசாலா - ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் கடாயில் ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கவும். பின்னர் சீரகம் மற்றும் கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இப்போது சிவப்பு மிளகு, உப்பு, சாட் மசாலா சேர்த்து சிறிது நேரம் நன்கு கலக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு, துருவிய சீஸ் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான சீஸ் வேர்க்கடலை தயார் .

    வேர்க்கடலை சாலட் :

    தேவையான அளவு :

    வேர்க்கடலை - 1 கப்
    வெள்ளரிக்காய் - 1 கப் (துண்டு துண்டாக நறுக்கியது)
    தேங்காய் - 3/4 கப் (துருவியது)
    கடுகு, எண்ணெய் - தேவையான அளவு
    பெருங்காயம் - 3/4 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1

    செய்முறை :

    ஒரு வாணலில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அடுப்பை அணைத்து இறக்கிவிட்டு இதனுடன் வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Evening Snacks, Health tips, Kids Care

    அடுத்த செய்தி