கடலை மிட்டாய், கொக்கு மிட்டாய், சுண்டல், முறுக்கு என ஆரோக்கியமான உணவுகளை நொறுக்குத் தீனிகளாக சாப்பிட்ட காலங்களில் எவ்வித உடல் நலக்குறைவும் இல்லாமல் வாழ்ந்தோம். ஆனால் இன்றைக்கு மாடர்ன் கலாச்சாரம் என்கிற பெயரில் பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற ஸ்நாக்ஸ்களைச் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை நாம் கெடுத்துவிட்டோம். இவ்வாறு இளம் வயதில் சாப்பிடும் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் அப்படியே உடலில் தங்கி, உடல் பருமனை ஏற்படுத்தும்.
மேலும் கெட்ட கொழுப்புகள் ரத்தக்குழாய்களில் படிந்துவிடுவதால், ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு ஏற்பட வழிவகை செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு கலாச்சாரம் தான் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே உங்களுடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கு உதவும் ஆரோக்கியமான இந்திய உணவுகளில் ரெசிபிகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
கொலஸ்ட்ராலைக்குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் செய்முறை:
முளைக்கட்டிய பயிர் சாலட்:
தேவையான பொருள்கள்:
முளைக்கட்டி பயறு வகைகள்
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி - 1/4கப்
வெந்தய இலைகள் - 1/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கொத்தமல்லி,தக்காளி, உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெய்யை சூடாக்கி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பின்னதாக சாலட்டின் மேல் ஊற்றினால் போதும். முளைக்கட்டிய சாலட் ரெடியாகிவிட்டது.
திணை உப்புமா:
தேவையான பொருள்கள்:
திணை - 1 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 1
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
பட்டாணி - அரை கப்
பச்சை பீன்ஸ் - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
நறுக்கிய கேரட் - 1/2 கப்
கேப்சிகம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் திணையை ஊற வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு , உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் வதக்கிய பின்னதாக, நறுக்கிய இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். இதனையடுத்து கேரட், கேப்சிகம், பட்டாணி, பச்சை பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இதனையடுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தபின்னதாக திணையை சேர்த்து நன்றாக கலக்கி கொண்டால் போதும். சுவையான திணை உப்புமா ரெடியாகிவிட்டது.
வெஜி ஓட்ஸ் சீலா:
தேவையான பொருள்கள்
ஓட்ஸ் மாவு - 1 கப்
துருவிய கேரட் - அரை கப்
நறுக்கிய கீரை - அரை கப்
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீருடன் அனைத்துப் பொருள்களுடன் ஓட்ஸ் மாவைச் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் நான்ஸ்டிக் தவாவை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதன் மீது ஒரு ஸ்பூன் மாவை ஊற்றி வட்டமாகப் பரப்பவும்.
இருபுறமும் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சமைக்கவும். இதற்கு ஏதாவது சட்னி செய்து பரிமாறினால் போதும் சுவையான வெஜி ஒட்ஸ் சீலா ரெடி.
மேலும் பச்சை காய்கறிகள், மீன், சிட்ரஸ் பழங்கள், பசலைக்கீரை, வெங்காயம் போன்ற உணவு பொருள்களை நீங்கள் உங்களது உணவில் எடுத்து கொள்ள மறந்துவிடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cholesterol, Food recipes, Healthy Food