முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு சொட்டு எண்ணெய் உபயோகிக்காமல் பூண்டு ஊறுகாய்.. இதோ ரெசிபி!

ஒரு சொட்டு எண்ணெய் உபயோகிக்காமல் பூண்டு ஊறுகாய்.. இதோ ரெசிபி!

எண்ணெய் இல்லாமல் ஒரு ஊறுகாய்

எண்ணெய் இல்லாமல் ஒரு ஊறுகாய்

Oil-Free Pickle Recipe : இந்த பூண்டு ஊறுகாய் சுவை மற்றும் மசாலா நிறைந்தது, ஆனால் இதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கப்படவில்லை. இது இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் என அனைவருக்கும் சிறந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ஊறுகாய்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். ஊறுகாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவை அனைத்து வகையான உணவுடனும் சேர்த்து சாப்பிட ஏதுவானது. எனவே, தான் ஊறுகாயை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

நமக்கு பிடிக்காத உணவாக இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஊறுகாய் இருந்தால் போதும் எப்பேர்ப்பட்ட உணவையும் சாப்பிட்டுவிடலாம். ஏனென்றால் அதன் சுவை அப்படி. அதுவும், ஊறுகாயில் மிதக்கும் எண்ணெயை பார்க்கும் போது நமக்கு பேரானந்தமாக இருக்கும். ஊறுகாய் என்றால் எண்ணெயில் மிதக்கும் சேர்மங்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்த வழக்கத்தை மாற்றி, எண்ணெய் இல்லாமல் ஒரு ஊறுகாய் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் :

பூண்டு - 200 கிராம்.

இஞ்சி - 50 கிராம்.

கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்.

காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப.

மாங்காய் வத்தல் - சிறிதளவு.

வினிகர் (கரும்பு) - 3 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து, பின் பதமாக இடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடாய் காய்ந்ததும் இதில் கருஞ்சீரகம் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Also Read | செரிமானத்திற்கு ஏற்ற இஞ்சி குழம்பு... இதோ ரெசிபி...!

பின்னர் ஊறுகாய்கான ஜாடி ஒன்றை எடுத்து அதில் பூண்டு, இஞ்சி, பெருஞ்சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் மாங்காய் வத்தல், உப்பு மற்றும் போதுமான அளவு வினிகர் (கரும்பு) சேர்த்து, ஜாடியை மூடி 10 நாட்கள் வரை நன்கு ஊற வைத்து எடுக்க எண்ணெய் இல்லா ஊறுகாய் ரெடி.

ஊறுகாயில் புளிப்பு சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

முறையாக தயார் செய்த இந்த பூண்டு ஊறுகாயினை சாதம், சப்பாத்தி என உங்களுக்கு பிடித்தமான உணவு வகையுடன் சேர்த்து சுவையாக பரிமாறலாம்.

First published:

Tags: Food, Food recipes, Garlic, Pickle