Home /News /lifestyle /

மார்பக புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் உணவுகள்...30 வயதுக்கு பின் அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது..!

மார்பக புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் உணவுகள்...30 வயதுக்கு பின் அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது..!

 மார்பக புற்றுநோய் உணவுகள்

மார்பக புற்றுநோய் உணவுகள்

எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் மரபணு மாற்றங்கள், பரம்பரை ரீதியாக வரும் அபாயம் ஆகியவை இந்த நோயை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள்

    மார்பகப் புற்றுநோயானது பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாகும். எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் மரபணு மாற்றங்கள், பரம்பரை ரீதியாக வரும் அபாயம் ஆகியவை இந்த நோயை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்கள், உங்கள் குடும்பத்தில் இருந்தால், புற்று நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகம்.

    இதேபோல், உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாகும்.

    பெண்களைப் போலவே, ஆண்களுக்கு கூட மார்பக புற்றுநோய் வரலாம். உலகின் ஆண்களின் மொத்த எண்ணிகையில் 1% மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, மரபு ரீதியான காரணங்களால் ஏற்படும் பாதிப்பை முழுவதுமாகத் தடுக்க முடியாது. சில ஆய்வுகள், மெடிட்டரேனியன் டயட் என்ற கடல் உணவு மட்டும் சாப்பிடுவது, மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

    மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் சில உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றிய விவரங்கள் இங்கே...

    கீரைகள், பச்சை இலைகள் மற்றும் காய்கறிகள்

    அனைத்து வகையான பச்சை நிற இயற்கையான உணவுப் பொருள்களிலும் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதைத் தவிர்த்து, பொதுவாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற காய்களை சமைத்து அல்லது பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் இந்த காய்கறிகளுடன் வரும் கீரைகளை பெரும்பாலும் பலரும் சாப்பிடுவதில்லை.

    முருங்கைக்கீரை பாலக்கீரை போன்ற பல்வேறு விதமாக இந்த கீரைகளையும் சமைத்து சாப்பிடலாம். இலை கீரைகளில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவற்றின் அதிக அளவு மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



    காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி

    காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிரஸ்ஸில் ஸ்ப்ரௌட்ஸ் மற்றும் ப்ரோக்கோலி உள்ளிட்ட சில குறிப்பிட்ட காய்கறிகளும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். இத்தகைய காய்கறிகளில் குளுக்கோசினோலேட் உள்ளன. இது உங்கள் உடலால் ஐசோதியோசயனேட்ஸ் எனப்படும் மூலக்கூறுகளாக மாறி, புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

    மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..? கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்...

    7,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 8 ஆய்வுகளின் தரவின் படி, அதிக அளவு கரோட்டினாய்டுகளைக் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதேபோல், 32,000 க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இரத்தத்தில் உள்ள மொத்த கரோட்டினாய்டுகளின் அதிக அளவு மார்பக புற்றுநோயின் அபாயத்தை 18-28% குறைக்கிறது. இது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

    கூடுதலாக, இலை காய்கறிகளில் அதிக அளவு பி வைட்டமின் ஃபோலேட் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் என்று வேறு சில ஆய்வுகள் காட்டுகின்றன.



    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்களில் இலேசாக புளிப்பு சுவை இருக்கும். திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி ஆகியவை வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் என்று பலரும் அறிந்திருப்போம். ஆனால் சிட்ரஸ் பழங்களில் இதைத் தவிர்த்து புற்று நோயை எதிர்க்கும் பல்வேறு காம்பவுண்டுகள் உள்ளன.

    சிட்ரஸில் ஃபோலேட், வைட்டமின் சி, பீட்டா கிரிப்டோக்சாந்தின், பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் மற்றும் குவெர்செடின், ஹெஸ்பெரிடின் மற்றும் நரிங்கின் போன்ற ஃபிளாவனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பல சேர்மங்கள் உள்ளன.
    இந்த ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. சிட்ரஸ் பழங்கள் மார்பக புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    8,000 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆறு ஆய்வுகள் அதிக அளவு சிட்ரஸ் பழங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை 10% குறைப்பதாகக் கண்டறிந்துள்ளன.



    மீன் மற்றும் கடல் உணவுகள்

    அசைவ உணவு, குறிப்பாக மீன்கள் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு மார்பக புற்று நோயை பெருமளவில் தடுப்பதற்கான பல்வேறு வகையான மீன் உணவுகள் உள்ளன. இறைச்சிகளில் காணப்படுவது போல மீன்கள் தேவையற்ற உடல் பாதிப்பை ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி பல உணவு வகைகளில் கிடைக்காத சில ஊட்டச்சத்துகள் மீன் உணவுகளில் அபரிமிதமாக காணப்படுகின்றன. பல்வேறு ஆய்வுகள் மார்பக புற்றுநோயை தடுக்கவும், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரவும், மார்பக புற்றுநோய் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காகவும் மெடிட்டரேனியன் டயட் எனப்படும் கடலுணவு முறையை பின்பற்றுமாறு பரிந்துரைக்கின்றன.

    மார்பகப் புற்றுநோய் எப்படி உருவாகிறது..? காரணங்களும்... அறிகுறிகளும்...

    சால்மன், ஹெர்ரிங் மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட மீன் வகைகள் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், செலினியம் மற்றும் கண்டோக்சாந்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய மீன்களை உண்பதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    883,000 பேரிடம் நடத்தப்பட்ட 26 ஆய்வுகளின் தராவு, கடல் உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 14% குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

    மூலிகைகள் மற்றும் மசாலா

    நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் சீரகம், இஞ்சி, பட்டை, சோம்பு, மற்றும், நறுமணப் பொருட்களான ரோஸ்மேரி, கற்பூரவள்ளி, தைம் போன்ற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் தாவர கலவைகள் உள்ளன. இதில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. பல மூலிகைகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன, அவற்றை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? சிகிச்சை முறைகளும் இதோ...

    புளித்த உணவுகள்

    தயிர் போன்ற புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தயிர் மற்றும் பனீர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களின் பயன்பாடு மேற்கத்திய மற்றும் ஆசிய மக்களில் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் அதிக பங்கை வகிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. சில புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



    பூண்டு மற்றும் வெங்காயம்

    பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகள் ஆர்கனோசல்பர் கலவைகள், ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    புவேர்ட்டோ ரிக்கோவில் 660 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகமாக உட்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    பீச், ஆப்பிள், பேரிக்காய்

    பழங்கள், குறிப்பாக பீச், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகியவை மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு வழங்குவதாக காட்டப்பட்டுள்ளது. 75,929 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு 2 முறையாவது பீச் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 41% குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பீச் பழத்தில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை தடுக்கிறது என்று ஒரு சோதனை ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மார்பக புற்றுநோய் இருக்குமோ என சந்தேகமா..? கண்ணாடி முன் இந்த சுய பரிசோதனை செய்து பாருங்கள்...

    கூடுதலாக, 272,098 பெண்களிடம் நடத்திய ஆய்வின் தரவுகளின் படி ஆப்பிள் மற்றும் பேரிக்காய் சாப்பிடுவது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

    ஆரோக்கியமான உணவுகள் என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பொதுவாக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் உணவுகள் ஆகும். ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல் வழக்கமான மார்பகப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் முக்கியம். நோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் உகந்த மாற்றங்களை மேற்கொள்ளுதல், உயிர்வாழும் விகிதத்தை அதிகரிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உணவுகள் இந்த நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Breast cancer, Breast Care, Healthy Food

    அடுத்த செய்தி