முட்டை புரோட்டீன் சத்து நிறைந்தது. எனவே குழந்தைகளுக்கு இது சத்தானது என்றும் சொல்லலாம். அதோடு சப்பாத்தி, காய்கறிகள் சேர்த்து செய்வதால் இது முற்றிலும் ஹெல்தியான ஒரு ரெசிபிதான். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்வதால் ஒரு ரோல் கூட மிச்சம் இல்லாமல் சாப்பிடுவார்கள். சரி எப்படி முட்டை சப்பாத்தி ரோல் ( egg chapati roll ) செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரோல் ஸ்டஃப் செய்ய :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
கேப்சிகம் - ½ கப்
முட்டைக்கோஸ் - 1 கப்
கேரட் - ½ கப்
உப்பு - ½ Tbsp
மிளகு தூள் - ½ Tbsp
வினிகர் - 1 Tsp
சர்க்கரை - ¼ Tbsp
முட்டை ஆம்லெட் செய்ய :
முட்டை - 6 எண்.
உப்பு - ¾ Tbsp
மிளகாய் தூள் - ½ Tbsp
பச்சை மிளகாய் - 2
சப்பாத்தி மாவு தயாரிப்பு :
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - ½ தேக்கரண்டி
தேவைக்கேற்ப தண்ணீர்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மற்ற மூலப்பொருள்கள் :
எண்ணெய் அல்லது நெய் - சப்பாத்தி சுடுவதற்கு
மயோனைஸ் - 1 Tbsp
தக்காளி கெட்ச்அப் - 1 Tbsp
சாட் மசாலா - 1 Tbsp
சீஸ் - தே.அ
செய்முறை :
முதலில் சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தியை சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் வெங்காயம், குடைமிளகாய் மற்றும் கேரட்டை நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
அதை கடாயில் எண்ணெய் விட்டு மூன்றையும் ஒன்றாக சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் அதில் உப்பு, மிளகுத்தூள், வினிகர், உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வந்தங்கினால் போதும். வந்தங்கியதும் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது முட்டை ஆம்ளெட் செய்ய கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு , மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
நோன்பு திறக்கும்போது இதை செய்து கொடுங்கள்.... இதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது..!
பின் சுட்ட சப்பாத்தியையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு தோசைக்கல் வைத்துக்கொண்டு அதில் எண்ணெய் தடவி கல்லை காய விடுங்கள்.
காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றி உடனே அதன் மேல் சப்பாத்தி ஒன்றை வையுங்கள். வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுத்துவிடுங்கள்.
இப்போது முட்டை உள்ள பக்கத்தில் மயோனைஸ் மற்றும் கெட்ச் அப் கொஞ்சம் தடவி சுற்றிலும் சீராக பரப்பி தடவுங்கள்.
அடுத்ததாக வதக்கி வைத்துள்ள வெங்காய ஸ்டஃப் ஒரு கரண்டி எடுத்து அதன் நடுவே நீளமாக பரப்பி வையுங்கள்.
அதன் மேல் சாட் மசாலா, மிளகுத்தூள் தூவி விடுங்கள். பின் சீஸை தேவையான அளவுக்கு நன்கு பரவலாக தூவி விடுங்கள். இப்போது மெதுவாக அதை உருட்டி வெள்ளை காகிதத்தில் சுருட்டி கொடுங்கள்.
அவ்வளவுதான் முட்டை சப்பாத்தி ரோல் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.