Home /News /lifestyle /

ஓஹோ... உணவை இப்படித்தான் சாப்பிடணுமாம் - நிபுணர்கள் தரும் அட்வைஸ்.! 

ஓஹோ... உணவை இப்படித்தான் சாப்பிடணுமாம் - நிபுணர்கள் தரும் அட்வைஸ்.! 

உணவு

உணவு

Healthy Diet Tips | சரியான முறையில் உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய உணவுகளை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
‘நொறுக்கத் தின்றால் நூறு வயது’, ‘உணவே மருந்து’, ‘பசித்து உண்’ என முன்னோர்கள் சொன்ன பொன்மொழிகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இவை அனைத்துமே நமக்கு உணர்த்துவது உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தான். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சர்விகித உணவு முக்கிய பங்காற்றுகிறது. பெரும்பாலானோருக்கு எது சரியான உணவு?! என்ற கேள்வி உண்டு. புரதம், மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ், திரவம், நார்ச்சத்து போன்றவை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் நமது உடலுக்கு வழங்க கூடியவையே சரியான உணவு என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவையே நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மேம்படுத்தவும் உதவுகின்றன. நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பிற "நாட்பட்ட தொற்றாத நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு உதவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆரோக்கியமான உணவு என்னென்ன பொருட்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் உலக சுதாரா நிறுவனம் விளக்கியுள்ளது. அதன்படி ஆரோக்கியமான உணவில் "வெவ்வேறு தானியங்கள், மாவுச்சத்துள்ள கிழங்கு வகைகள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், விலங்குகள் மூலம் பெறப்படும் இறைச்சி, முட்டை, பால் போன்ற பொருட்கள் அடங்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த உணவு வகைகள் மற்றும் அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி நாம் நன்றாக அறிந்திருந்தாலும், அதனை என்ன மாதிரியான வரிசையில் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.



சரியான முறையில் உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய உணவுகளை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். சரியான வரிசை என்ன என்று யோசிக்கிறீர்களா? பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ மூலமாக அதனை நமக்கு விளக்கியுள்ளார்.

Also Read : சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இத்தனை பயன்கள் உள்ளதா..? தவறாமல் சாப்பிடுங்க...

தட்டில் உள்ள உணவுகளை குறிப்பிட்ட வரிசையில் சாப்பிடும் நபர்களை பார்ப்பது கடினம் என குறிப்பிட்டள்ள லோவ்னீத் பாத்ரா, முதலில் காய்கறிகள், அடுத்து புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், கொழுப்பு நிறைந்த இறைச்சி போன்றவற்றையும், கடைசியாக அரிசி போன்ற கார்ப்போஹைட்ரோட் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார். இதன் மூலமாக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும் அளவு கணிசமாக குறைவதோடு, ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி உடல் எடையை பராமரிக்க உதவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.



மேலும் முதலில் காய்கறிகள் மற்றும் புரதங்களைச் சாப்பிட தொடங்கி, இறுதியாக கார்போஹைட்ரேட்டுகளுடன் முடிக்க முழுமையான உணர்வை தரும் என்றும், இதனால் நீண்ட நேரம் பசியெடுப்பதை தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read : தினமும் சிக்கன் சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? கவனமாக இருங்கள்...

இதுகுறித்து லோவ்னீத் பாத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "ஏனெனில், புரதம் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை வெளியிடுவதை மெதுவாக்குகிறது, இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும் சீக்கிரமாக பசிப்பது போன்ற உணர்வும் கட்டுப்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Lovneet Batra (@lovneetb)






இப்போது தட்டில் உள்ள உணவை என்ன மாதிரியான வரிசையில் சாப்பிட வேண்டும் என்பதை அறிய முடிந்தது அல்லவா?.. இனி இதே வரிசையில் தினந்தோறும் உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமையுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Food, Lifestyle

அடுத்த செய்தி