முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / PCOS, நுரையீரல் நோய், சிறுநீரக கற்கள் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் ஆரோக்கிய ரெசிபீஸ்.!

PCOS, நுரையீரல் நோய், சிறுநீரக கற்கள் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் ஆரோக்கிய ரெசிபீஸ்.!

ரெசிபீஸ்

ரெசிபீஸ்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்பதை நாம் சிறுவயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். அந்த அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஆப்பிளில் அடங்கியுள்ளன. ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளில் நுரையீரலை வலுவாக வைத்திருக்கும் என்பதும் ஒன்று. நம்முடைய நுரையீரல் திறம்பட செயல்பட வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், ஜூஸ்கள்,சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஆப்பிள்கள் உதவுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் நமது உடல்நலத்தை பேணி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீரான உணவுப்பழக்கம் நோய் வராமல் தடுக்க உதவுவதோடு, உடலில் ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நிலைமைகளை சமாளிக்கவும், சரி செய்யவும் கூட உதவுகின்றன.

நீங்கள் PCOS நிலைமையை கொண்டிருந்தால் அல்லது நுரையீரல் நோய் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா.? மருத்துவர்கள் பல உணவுகளை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம். ஆனால் நீங்கள் மேற்கண்ட நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் இதோ உங்களை ஆரோக்கியமாக மற்றும் திடகாத்திரமாக வைக்க உதவும் ரெசிபிக்களை கீழே பார்க்கலாம். இவை உங்களை வலிமையாக மற்றும் ஆரோக்கியமாக மாற உதவும்.

உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆப்பிள் வால்நட் சாலட் :

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்பதை நாம் சிறுவயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். அந்த அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஆப்பிளில் அடங்கியுள்ளன. ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளில் நுரையீரலை வலுவாக வைத்திருக்கும் என்பதும் ஒன்று. நம்முடைய நுரையீரல் திறம்பட செயல்பட வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், ஜூஸ்கள்,சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஆப்பிள்கள் உதவுகின்றன.

தேவையான பொருட்கள்:

மெல்லியதாக வெட்டப்பட்ட ஆப்பிள் - 1 கப்

நறுக்கப்பட்ட லெட்டூஸ் - 1 கப்

மாதுளை - 1 கப்

வால்நட்ஸ் - ½ கப்

ஆலிவ் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

பிளாக் பெப்பர் பவுடர் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

- ஆப்பிள், லெட்டூஸ், மாதுளை, வால்நட்ஸ் ஆகியவற்றை ஒரு பவுலில் எடுத்து கொள்ளுங்கள்

- பின் ஒரு தனி கப்பில் ஓலீவ் ஆயில், உப்பு, மிளகு ஆகியவற்றை கொட்டி நன்கு கெட்டியாகும் வரை கலக்கவும்

- பின் பவுலில் எடுத்து வைத்துள்ள பழ கலவையில் இந்த ஆலிவ் ஆயில் கலவையை சேர்க்கவும்

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்க நோ-குக் ஓவர் நைட் ஓட்மீல் :

சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்க விரும்பினால் oxalate அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் அல்லது oxalate-ஐ பிணைக்க கால்சியம் அளவை அதிகரிக்க வேண்டும். லோ ஆக்ஸலேட் டயட்டின் ஒரு பகுதியாக அரிசி மற்றும் ஓட்ஸ் இருக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 1/3 கப்

ரோல்டு ஓட்ஸ் - ¼ கப்

கிரீக் யோகர்ட் - ¼ கப்

சியா விதைகள் - 1 டீஸ்பூன்

ஆலிவ் கிச்சன் பீனட் பட்டர் - 1 டீஸ்பூன்

ஃபிரெஷ்ஷான பழங்கள் - ¼ கப் (வாழைப்பழங்கள், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி அல்லது ப்ளூபெர்ரி)

செய்முறை:

பால், ஓட்ஸ், கிரீக் யோகர்ட், சியா விதைகள், பீனட் பட்டர் உள்ளிட்டவற்றை ஒரு ஹாஃப்-பின்ட் ஜாரில் எடுத்து கொண்டு அதை மூடி கொண்டு மூடி விடுங்கள். பின் உள்ளே உள்ள அனைத்தும் ஒன்றாக கலக்கும் வரை நன்றாக குலுக்குங்கள். சில வினாடிகள் கழித்து மூடியை அகற்றி அதில் நீங்கள் எடுத்து வைத்துள்ள ஃபிரெஷ்ஷான பழத்தை உள்ளே போட்டு ஜாரை மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும். பின் அடுத்த நாள் காலை எடுத்து சாப்பிடவும்.

PCOS உள்ளவர்கள் சாப்பிட கூடிய ஸ்வீட் பொட்டேட்டோ கறி :

PCOS உள்ள பெண்களுக்கு சக்கரவள்ளி கிழங்கு சிறப்பான தேர்வு. இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன மற்றும் ஃபைபர் சத்து நிறைந்தவை. PCOS டயட்டில் நிறைய ஃபைபர் சத்துக்கள் மற்றும் சாலட்ஸ் சேர்க்கப்பட வேண்டும். இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், ஃபைபர் மற்றும் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ் இருப்பதால் வீக்கம், வாட்டர் ரிட்டென்ஷன் மற்றும் ஹார்மோன் கோளாறுகளுக்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

வெங்காயம், பூண்டு, ஆலிவ் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு - தேவைக்கேற்ப

வேகவைத்த சக்கரவள்ளிகிழங்கு - 1 கப்

வேகவைத்த கொண்டைக்கடலை - ½ கப்

தேங்காய் பால் - 2 டீஸ்பூன்

பசலைகீரை - ½ கப்

செய்முறை :

பூண்டு மற்றும் வெங்காயத்தை எண்ணெயில் வதக்கவும். பின் கொத்தமல்லி, இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து க்யூப் செய்யப்பட்ட சக்கரவள்ளிகிழங்குசேர்த்து வேக வைக்கவும். பின் இதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொண்டைக்கடலை மற்றும் ரெட் கறி பேஸ்ட்டை சுமார் 8-10 நிமிடங்கள் மிதமாக கொதிக்க வைக்கவும். சக்கரவள்ளிகிழங்கு நன்கு சாஃப்டாக வெந்தவுடன், அதில் தேங்காய் பால் மற்றும் பசலை கீரையை சேர்க்கவும். அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவி பரிமாறவும்.

First published:

Tags: Healthy Food, Kidney Disease, Lungs health, PCOS