ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு மிட்டாய்..! இதை ட்ரை பண்ணி பாருங்க..!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு மிட்டாய்..! இதை ட்ரை பண்ணி பாருங்க..!

பூண்டு மிட்டாய் ரெசிபி..

பூண்டு மிட்டாய் ரெசிபி..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளாலேயே உடலை நோயின்றி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது எத்தனை பெரிய வரம். இதை அறிந்த பலர் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அதனால்தான் நம் முன்னோர்களும் நோய் நொடிகளின்றி பல ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கியங்கள் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பூண்டினை சாப்பிட பிடிக்காதவர்கள் பூண்டு மிட்டாய் செய்து சுவையாக சாப்பிடலாம் அதற்கான ரெசிபி தான் இது.

தேவையான பொருட்கள்

சர்க்கரை - 4 கப்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூக்க

தண்ணீர் - 4 கப்

உரித்த பூண்டு - 1 கப்

உப்பு தே. அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வேகவைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் அதை போடவும். பின்னர் மீண்டும் வெளியே எடுத்து சுத்தமான துணியில் கொட்டி ஈரமில்லாமல் உலர வைக்கவும்.

Read More : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பூண்டு பால்..! சளி, மலச்சிக்கல் பிரச்னைகளுக்கும் குடிக்கலாம்..!

இப்போது ஒரு வானெலியில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைப் போட்டு மிதமான தீயில் பிரவுன் நிற மாக வரும் வரை விடாமல் கிளறவும். அதில் ஏற்கனவே உலர வைத்த பூண்டுகளைப் போட்டு அவற்றின் மேல் சர்க்கரை கலவை நன்றாகப் படியுமாறு கிளறவும்.

5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். இப்போது உங்களுக்கு சுவையான அரோக்கியமான பூண்டு மிட்டாய் ரெடி

First published:

Tags: Food, Garlic, Health