ஃபிட்னஸ் பிரியர்கள் பயன்படுத்தும் ’புரோட்டீன் பவுடர்’ ஆபத்தானதா?

ப்ரோட்டீன் பவுடர் உட்கொள்வதால் பக்கவிளைவுகளை சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஃபிட்னஸ் பிரியர்கள் பயன்படுத்தும் ’புரோட்டீன் பவுடர்’ ஆபத்தானதா?
மாதிரி படம்
  • Share this:
இன்று புரோட்டீன் பவுடர்களுக்கு இருக்கும் டிமாண்ட் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். உணவுகள் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்திய இந்தியர்கள் தற்போது புரோட்டீன் பவுடர்கள் பின்னால் செல்வது கவலைக்குரிய விஷயம்தான்.

ஜிம் சென்றாலே அவர்கள் பரிந்துரைக்கும் முதல் விஷயம் புரோட்டீன் பவுடர்தான். அதை வாங்கி உட்கொண்டு வந்தால்தான் ஃபிட்டாக இருக்க முடியும் என ஜிம்மில் பணம் கட்டிய அடுத்த நொடியே ஒரு பாக்கெட் கொடுக்கப்படும்.

அப்படி என்ன இந்த புரோட்டீன் பவுடரில் உள்ளது..?


புரோட்டீன் பவுடர்கள் என்றால் சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி, கிழங்கு வகைகள், முட்டை அல்லது பால் ஆகியவற்றை பவுடராக்கி பதப்படுத்தப்பட்டிருக்கும். சுவைக்காக சர்க்கரை, செயற்கை ஃபிளேவர், வைட்டமின், மினரல்களும் உள்ளடக்கம். இது ஒரு ஸ்கூப் 10 முதல் 30 கிராம் கொண்டது. இது தசையை வலுபெற வைக்கவும் , உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இதில் உள்ள ஆபத்து என்ன என்கிறீர்களா..?

ஹெல்த் ஹார்ட்வர்ட் அளித்துள்ள தகவல்படி இந்த புரோட்டீன் பவுடர்கள் எந்த அளவிற்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாது. ஆனால் அதிக புரோட்டீன் உட்கொள்வதால் பக்கவிளைவுகளை சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று கூறப்படுகிறது.பால் சார்ந்த பொருட்களை உட்கொள்வதால் அலர்ஜி இருந்தால் அவர்களுக்கு இந்த புரோட்டீன் பவுடர் உதவும் என்பதற்காக சாத்தியக் கூறுகள் குறைவு. அதேபோல் இது செரிமானத்தை பாதிக்கும் என்றும் Harvard Health வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் சில புரோட்டீன் பவுடர்கள் சர்க்கரை கலப்படம் அதிகம் கொண்டுள்ளதாகவும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கவும் , உடல் எடையை அதிகரிக்கவும் செய்யலாம்.

அதேபோல் இந்த புரோட்டீன் பவுடர்களின் பாதுகாப்பு அம்சங்களை FDA உற்பத்தியாளர்களே நிர்ணயித்துக்கொள்ள சுதந்திரம் அளித்துள்ளது. இதனால் அது எந்த அளவு பாதுகாப்பானது , என்னென்ன கலப்படம் உள்ளது என்பது உற்பத்தியாளர்களுக்கே வெளிச்சம்.

முழு நெல்லிக்காய் நன்மைகள் பற்றித் தெரிந்தால் தினமும் ஒன்று சாப்பிடுவீர்கள்: Indian Gooseberry ஒரு அற்புதம்: ஏன்?

Clean Label Project சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் புரோட்டீன் பவுடர்கள் நச்சு நிறைந்தது என்று கூறியுள்ளது. அவர்கள் 134 புரோட்டீன் பவுடர்களை வைத்து 130 வகையான நச்சுகள் இருப்பதையும், அதிகமாக மெட்டல் சேர்க்கப்படுவதும் குறிப்பாக பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் bisphenol-A என கலக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் புற்றுநோய் ஆபத்து வரலாம் அல்லது மற்ற உடல்நலக் குறைபாடுகள் வரலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் bisphenol-A வானது கட்டுப்படுத்தப்பட்ட அளவைக் காட்டிலும் 24 மடங்கு அதிகமாக கலக்கப்படுவதாக எச்சரிக்கிறது.

எனவே புரோட்டீன் பவுடர்களை நாடுவதைக் காட்டிலும் நேரடியாக உணவுப் பொருட்களை உட்கொண்டு சத்துக்களைப் பெறலாம் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading