மரணத்திற்கு வாயிலாகும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகளை உட்கொள்பவர்களின் இருதய நோய் அல்லது இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப உணவு வகைகள் மாறிக்கொண்டு வருவதால், நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எண்ணெய் பலகாரங்கள் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட பாஸ்ட் புட் உணவுகள் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கின்றன. அவை உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான உணவு இல்லை என்றாலும், பாஸ்ட்புட் சுவைக்கு அடிமையாகி, அதை நோக்கி பயணிக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்தில் ஹெல்த் சம்பந்தமான இதழில் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  அதில், பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் செய்யப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. தினமும் சாப்பிடுபவர்கள் பக்கவாதம் அல்லது மரணிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளது. மக்களின் உணவு முறைகள் குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளை வெளியிட்டு வரும் இங்கிலாந்து ஜொர்னல் என்ற இதழ் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளை ரொட்டி மற்றும் குரோசண்ட்ஸ் உணவுகளை உட்கொள்பவர்கள் இதயநோயால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.

  16 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் ஏழை, நடுத்தரம் மற்றும் பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் உணவு தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், வெள்ளை அரிசி, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள் என மூன்று வகைகளாக உணவுகளை பிரித்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் வெள்ளை ரொட்டி, நூடுல்ஸ், பாஸ்தா, பேக்கரி உணவுப் பண்டங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. முழு தானியங்களில் உடைக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அனைத்து தானியங்களும், வெள்ளை அரிசி உண்பவர்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தது.

  அதில், வெள்ளை அரிசி மற்றும் முழு தானியங்கள் மற்றும் உடைக்கப்பட்ட தானியங்களை உணவாக எடுத்துக்கொள்பவர்கள் சதவீத அடிப்படையில் பெரிதான பாதிப்பை சந்திக்கவில்லை என அந்த ஆய்வு கூறுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்களில் 27 விழுக்காட்டினர் குறைந்த வயதில் இறப்பை தழுவியதாகவும், 33 விழுக்காட்டினர் அதிகபட்ச இதயநோயால் பாதிக்கப்பட்டதாகவும், 47 விழுக்காட்டினர் பக்கவாதத்தால் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. 1,37,130 பேரிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த முடிவு கிடைத்துள்ளது.

  மேலும், குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள், கார்போஹைட்ரேட் சரிவிக அளவில் உடலில் பராமரிப்பவர்கள் உடலில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்வதில்லை என அந்த ஆய்வு கூறுகிறது. அவர்களின் வாழ்க்கை முறை ஹெல்தியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. அதேநேரத்தில் சுவைக்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களின் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், பல்வேறு உடல் உபாதைகளை சந்திப்பதாக எச்சரித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: