ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மஞ்சள் - தேன் ரெசிப்பி: சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா..?

மஞ்சள் - தேன் ரெசிப்பி: சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா..?

மஞ்சளும் தேனும் கலந்து குடிச்சா என்ன ஆகும் தெரியுமா..?

மஞ்சளும் தேனும் கலந்து குடிச்சா என்ன ஆகும் தெரியுமா..?

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் மருத்துவப்பொருள் ஒரு சிறந்த நிவாரணி. மஞ்சள் புற்றுநோய்க்கு எதிரி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மஞ்சள் அஜீரணத்தை குணப்படுத்தும். உடல் வலி, கட்டிகளுக்கு நிவாரணி, புற்றுநோய்க்கு எதிரி. அதேசமயம் மனப்பதற்றம், மன அழுத்தத்தையும் போக்கச் செய்யும்.

  தேன் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். அலர்ஜி , காயங்கள் இருந்தால் குணமாக்கும். அதேபோல் இருமல் ,சளியை குறைக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சரிசெய்யும். நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

  இத்தனை குணம் கொண்ட இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

  எவ்வாறு சாப்பிடுவது ?

  1/4 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் மஞ்சள் , 2 சொட்டு எலுமிச்சை சாறு.

  இந்த விகிதத்தில், முன்று நான்கு நாட்களுக்கு தேவையான அளவில் நன்கு கலந்து அதை ஒரு சிறிய பாத்திரத்தில் நிரப்பி வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.

  சளி, இருமல், அலர்ஜி , அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் இருந்தால் இதை ஒரு நாளைக்கு மூன்று வேளை அரை ஸ்பூன் சாப்பிடுங்கள்.

  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: