முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பப்பாளி காய் சாப்பிட்டால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..?

பப்பாளி காய் சாப்பிட்டால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..?

பப்பாளி காய்

பப்பாளி காய்

பொதுவாக பப்பாளி காயில் என்சைம்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்களான பப்பைன் மற்றும் சைமோபைபன் அதிகளவில் உள்ளதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பப்பாளி மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்பாளியை தினமும் உங்களது உணவு முறையில் எடுத்துக்கொள்ளலாம்.. குறிப்பாக அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால் உடல் எடையினை குறைக்க விரும்புவோருக்கு உகந்த பழமாக உள்ளது. இதுவரை நாம் பப்பாளி பழங்களை மட்டும் தான் பெரும்பாலும் சாப்பிடுகின்றோம். ஆனால் பப்பாளி காயிலும் ஏராளாமான நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்டீல் என்ன சொல்கிறார்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

பப்பாளி காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

செரிமான பிரச்சனைக்குத் தீர்வு:

பப்பாளி காய் உங்களது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பப்பேன் என்ற நொதிகளைக் கொண்டிருப்பதால், செரிமானத்திற்கான இரைப்பை அமிலங்களின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாவை வெளியேற்றுவதோடு வயிற்றில் நச்சுத்தன்மை இல்லாமல் வைக்கிறது.

புற்றுநோய் தடுத்தல்:

பப்பாளி காயில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இவற்றை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் போது புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு:

பொதுவாக பப்பாளி காயில் என்சைம்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்களான பப்பைன் மற்றும் சைமோபைபன் அதிகளவில் உள்ளதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது. உடலில் புதிய செல்களை உருவாக்கி வயிற்று வீக்கம், வயிறு வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

சுவாச பிரச்சனை, தொண்டை பிரச்சனை மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

பப்பாளி காயில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய் பிரச்சனை ஏற்படாமல் இருக்க உதவியாக உள்ளது.

Also Read : இந்த 6 பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடவே கூடாதாம்..!

இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பப்பாளி காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்பட்டாலும், இதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக இதில் பாப்பைன் என்கிற நொதி உள்ளதால், அதிகளவில் இதை நாம் சாப்பிடும் போது உணவுக்குழாயில் ஒவ்வாமை ஏற்படுத்துவதோடு வாந்தி வரச்செய்கிறது. மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தான் பப்பாளி தரும் என்ற மனநிலையில் அதிகளவில் சாப்பிடும் போது ஒவ்வாமை, சுவாசப்பிரச்சனை போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

First published:

Tags: Health tips, Healthy Food, Papaya