ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுவையான பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி ரெசிப்பீஸ்..இதுல இவ்வளவு நன்மை இருக்கா?

சுவையான பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி ரெசிப்பீஸ்..இதுல இவ்வளவு நன்மை இருக்கா?

சுவையான பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி ரெசிப்பீஸ்

சுவையான பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி ரெசிப்பீஸ்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள் பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி. அவற்றின் நன்மைகள் இவை தாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தினசரி உணவில் பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள் என பல ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள்களை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு உடலுக்கு எது ஆற்றல் தரும்? என்பதை தெரிந்துக் கொண்டு சாப்பிடும் நாம், சில நேரங்களில் நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் தரக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை மறந்துவிடுவோம். அவற்றில் ஒன்று தான் பலாப்பழம் மற்றும் வெள்ளை பூசணி என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படி என்னென்ன ஊட்டச்சத்துக்கள்? உள்ளது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

பலாப்பழத்தின் நன்மைகள்:

பச்சை பலாப்பழத்தின் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது எனவும் இதில் பொட்டசியம் அதிகளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறார் தில்லி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் நிசேதா பாட்டியா.

Read More ; எச்சரிக்கை... மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்..!

மேலும் பச்சை பலாப்பழத்தைச் சாப்பிடும் போது இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்களில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிக கொழுப்பு, புற்று நோய் மற்றும் டைப் 2 நீரழிவு நோய் பிரச்சனையைத் தடுக்க உதவியாக உள்ளதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் தேவையற்ற உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

பலாப்பழ ரெசிபிகள்:

உங்களது தினசரி உணவில் பலாப்பழத்தை பல்வேறு வழிமுறைகளில் செய்து சாப்பிடலாம். நீங்கள் இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது எலுமிச்சை, புதினா, மிளகு, சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். அல்லது ஸ்மூத்தியாகவும் சாப்பிடலாம். இதோடுபச்சை பலாப்பழம் பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், Hba1c, விரதம் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது

பலாப்பழத்தை (green jackfruit) அப்படியே சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இட்லி, தோசை, அப்பம் போன்ற மாவுகளில் 1-2 டீஸ்பூன் பச்சை பலாப்பழத்தைத் தூளை மாவுடன் கலந்து சுடலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து தேவையற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதனால் உடல் பருமனும் ஏற்பட வாய்ப்ப்பில்லை. இதோடு பழத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் புளித்த சாறு, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் உதவியாக உள்ளது.

வெள்ளை பூசணியின் நன்மைகள்:

வெள்ளை பூசணிக்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளதால் மனச்சோர்வுடன் இருக்கும் நபர்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இதில் உள்ளடிரிப்டோபனின் என்கிற அத்தியாவசிய அமினோ அமிலத்தின் வளமான மூலமாகும், இது மனச்சோர்வு மனநிலையை உயர்த்த உதவுகிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோடு இரத்தத்தில் எல்டிஎல் அளவைக் குறைப்பதன் மூலம் கொழுப்பைக் கட்டுப்படுத்த மற்றும் அழற்சி எதிர்ப்பு, கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது.

வெள்ளை பூசணியின் சாறு வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதன் விதைகளில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் மற்றும் துத்தநாகம் உள்ளது, இது புரோஸ்டேட் விரிவாக்கம் மற்றும் எரிச்சலூட்டும் சிறுநீர்ப்பை பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கு வெள்ளை பூசணி ஒரு அற்புதமான பேக் செய்யப்பட்ட உணவாகவும் உள்ளது.

இவ்வாறு பல்வேறு நன்மைகள் உள்ளதால், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். “தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது 30-40 நிமிட நடை/உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது உங்கள் வழக்கமான காலை உணவை உட்கொண்டு ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வரும் போது நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.

ஸ்மூத்தியும் இதில் செய்யலாம். வெள்ளை பூசணி ஸ்மூத்தியை ½ ஆப்பிள் அல்லது அன்னாசிப்பழம், வெள்ளரியின் சில துண்டுகள் அல்லது சில கருப்பு மிளகு, இளஞ்சிவப்பு உப்பு, ஏலக்காய் சேர்த்து செய்து பருகலாம்.ஜூஸை தவிர, நீங்கள் வெள்ளை பூசணிக்காயை “சாலட் வடிவத்திலும், வேறு சில காய்கறிகளுடன் சேர்த்து சான்ட்விச், சப்பாத்தி போன்றவற்றிற்கு சப்ஜியாகவும் செய்து சாப்பிடலாம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Food, Health, Jack Fruit, Pumpkin