ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஊறவைத்த பாதாம், திராட்சையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - பட்டியலிடும் ஆயுர்வேத நிபுணர்!

ஊறவைத்த பாதாம், திராட்சையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - பட்டியலிடும் ஆயுர்வேத நிபுணர்!

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை

பாதாம் மற்றும் திராட்சையின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது. முடி ஆரோக்கியமாக வளரவும், சருமம் பொலிவாகவும் இருக்க தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலை உணவை அனைத்து வயதினரும் தவறாமல் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க இது அவசியம். மேலும் அதில் காலை உணவில் பால், நட்ஸ், பழங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். பாதம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையா? இதுகுறித்து விளக்கும் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிக்ஸா பாவ்ஸர், காலை உணவில் ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை உள்ளிட்டவற்றை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும் என கூறுகிறார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராமில் பாதாம் மற்றும் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். அதில் "ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை உங்கள் நாளை தொடங்க சிறந்த வழி" என்ற தலைப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஷேர் செய்துள்ளார்.


பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பாதாம், திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவது அவற்றின் ஊட்டச்சத்துக்களை மிகச் சிறந்த முறையில் 8 உறிஞ்சுவதற்கு நம் உடலுக்கு உதவுகிறது.
ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை காலையில் சாப்பிடுவதால் மாதவிடாய் கால பிரச்சனைகள், வலி நீங்குகிறது.
தினமும் காலையில் இதனை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது.
ஊறவைத்த திராட்சை, பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால் நினைவாற்றலுக்கும் நல்லது.
பாதாம் மற்றும் திராட்சையின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது. முடி ஆரோக்கியமாக வளரவும், சருமம் பொலிவாகவும் இருக்க தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுங்கள்.
மேலும் இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இது இதயத்துக்கு நல்லது. அமிலத்தன்மையை தடுக்கவும் ஊறவைத்த பாதாமை சாப்பிடலாம்.
இவை தவிர, ஊறவைத்த பாதாம் ஆன்டி ஆக்ஸிடண்ட்டின் ஓர் நல்ல மூலம் ஆகும். மேலும், ஊறவைத்த பாதாமில் வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.
பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதனை அனைத்து வயதினரும் தினமும் சாப்பிட வேண்டும் என டாக்டர் டிக்ஸா பாவ்ஸர் விளக்கியுள்ளார்.
First published:

Tags: Almond, Health tips, Yellow Raisins