ஆயுர்வேதத்தில் நெய்தான் மகத்தான மருத்துவம். ஆனால் பலருக்கும் அது கொழுப்பு என்பது மட்டுமே அறியப்படுகிறது. சில வீடுகளில் பண்டிகை நாட்களில் மட்டும் எட்டிப் பார்க்கும் மளிகைப் பொருளாக இருக்கிறது. ஆனால் நெய்யை தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
நெய் நன்மைகள் :
எலும்புகளின் இலகுத் தன்மைக்கு உதவும் இஞ்சின் ஆயில் போன்றது.
சருமத்திற்கு இயற்கை மாய்ஸ்சரைசர்
நெய்யில் உள்ள அமினோ ஆசிட், ஒமேகா 3 ,6 தொப்பை மற்றும் உடல் கொழுப்பை கரைக்க உதவும்.
கருவளையம் இருந்தால் கண்களுக்குக் கீழ் தடவுங்கள். மறைந்து போகும்.
கொழுப்பு அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் தலை முடிக்கு நல்லது.
எப்படி பயன்படுத்துவது..?
வெதுவெதுப்பான நீரோடு நெய் ஒரு ஸ்பூன் குடிக்கலாம்.
நெய்யுடன் மஞ்சள் கலந்து ஒரு ஸ்பூன் குடித்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிக்கலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.