Home /News /lifestyle /

சிவப்பு அரிசியை தினசரி உணவாக சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? ரெசிபியும் உள்ளே...

சிவப்பு அரிசியை தினசரி உணவாக சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? ரெசிபியும் உள்ளே...

சிவப்பு அரிசி

சிவப்பு அரிசி

சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

கருப்பு அரிசி மற்றும் பழுப்பு அரிசி பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீங்கள் எப்போதாவது சிவப்பு அரிசி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சமீபத்திய கண்டுபிடிப்பு அல்ல; பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இது, பல ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரிய வகை அரிசியின் பல நன்மைகள் பற்றியும், அதனைக் கொண்டு எளிதான சமையல் குறிப்புகளை நீங்கள் எவ்வாறு செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்...

சிவப்பு அரிசியின் நன்மைகள்:

1. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்:

ஆய்வுகளின்படி, சிவப்பு அரிசி இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

2. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்:

சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நுரையீரல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது, இது தானாகவே ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது.

3. ஆக்ஸிஜன் நுகர்வை அதிகரிக்கும்:

சிவப்பு அரிசியில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது, மேலும் தினமும் சிவப்பு அரிசியை உட்கொள்வது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் செல்களுக்கும் அனுப்ப உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் ஆக்ஸிஜனின் மேம்பட்ட நிலை உங்கள் மனநிலை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.



4. செரிமானத்தை மேம்படுத்தும்:

சிவப்பு அரிசி செறிவான நார்ச்சத்துக்களின் மூல ஆதாரமாக விளங்குகிறது, எனவே இது செரிமானம் சம்பந்தமான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. . இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகளின் நன்மையால் நிரம்பியுள்ளது, மேலும் உடலில் இருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்றி, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

இந்திய சமையலில் பெருங்காயம் ஏன் கட்டாயம் பொருளாக சேர்க்கப்படுகிறது தெரியுமா..?

5. இதய நோய்கள் வராமல் தடுக்கும்:

சிவப்பு அரிசியில் முழு தானியங்கள் இருப்பதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை எளிதில் குறைக்கலாம். சிவப்பு அரிசியின் தவிடு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் இயற்கைப் பொருட்களைச் சேர்க்க விரும்பினால், நோனி, ஆளிவிதை, அத்தி போன்றவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

6. சோர்வை குறைக்க உதவும்:

சிவப்பு அரிசி எடையை குறைக்கவும், பராமரிக்கவும் விரும்புவோருக்கு ஏற்றது மற்றும் இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. சிவப்பு அரிசியில் உள்ள தவிடு உங்களை நீண்ட காலத்திற்கு திருப்தியாக உணர வைக்கிறது.



சிவப்பு அரிசியை வைத்து தயாரிக்க கூடிய உணவுகள்:

1. சிவப்பு அரிசி பூண்டு சாதம்:

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சிவப்பு அரிசி - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பூண்டு - 4 - 6 பற்கள்

வெங்காயம் - 1

தக்காளி - 1

நறுக்கப்பட்ட கேரட், குடைமிளகாய் - தேவையான அளவு

சோயா சாஸ், வினிகர், மிளகு, உப்பு - தேவையான அளவு

விலை ஏறும் போது கவலை வேண்டாம்... தக்காளியை போலவே புளிப்பு சுவை கொண்ட இந்த பொருட்களை முயற்சித்து பாருங்கள்...

செய்முறை:

ஒரு கடாயில், 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அது நன்றாக காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள் சேர்த்து 40-50 விநாடிகள் வதக்கவும். இப்போது, ​​ நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேப்சிகம் மற்றும் கேரட் சேர்க்கவும். அவற்றை 4-5 நிமிடங்கள் வதக்கவும், பின்னர் சிறிது உப்பு, கருப்பு மிளகு, சோயா சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்த கலவையுடன் வேகவைத்த சிவப்பு அரிசி சேர்க்கவும். மெதுவாக நன்றாக கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.



2. சிவப்பு அரிசி கீர்:

தேவையான பொருட்கள்:

பால் - 3 கப்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
சிவப்பு அரிசி - 6 டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, 3 காப் பாலை ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் சிறிது, சிறிதாக சர்க்கரை சேர்த்து கிளறவும். இப்போது நன்றாக கழுவி ஊறவைக்கப்பட்ட சிவப்பு அரிசியை சேர்த்து, அதனை நன்றாக வேக வைப்பதற்காக மிதமான தீயில் சமைக்கவும். இதனை மேலும் சுவையாக்க நெய்யில் முந்திரி, பாதாம், திராட்சை போன்றவற்றை வதக்கி, கீர் மீது ஊற்றி பரிமாறவும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Rice benefits

அடுத்த செய்தி