இதய நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் காளான்.. இத்தனை நன்மைகளா ?

காளான்

உங்கள் உணவில் அதிக காளான்களைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய சில நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

 • Share this:
  காளான்கள் சிடின் மற்றும் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டன், சிப்பி, ஷிடேக், எனோகி, ஷிமேஜி, போர்டோபெல்லோ மற்றும் போர்சினி என உண்ணக்கூடிய காளான்கள் பல வடிவங்களில் உள்ளன. இந்த காளான்கள் பல்துறை திறன் கொண்டவை. அவை உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, காளான்களை தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாக பூஞ்சை/காளான்கள் பொதுவாக காய்கறிகளின் பிரிவில் வைக்கப்படுகின்றன.

  Harvard T. H. Chan School of Public Healthன் படி, அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.

  காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அவை பீட்டா-குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது. எனவே, பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. உங்கள் உணவில் அதிக காளான்களைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய சில நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: