தினமும் பேரிச்சை சாப்பிட்டால் உடலில் இந்த மாற்றங்கள் நடக்குமாம்..!

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை இன்பமாக்குவதற்கு பேரிச்சையும் நண்பனாக உதவும்.

தினமும் பேரிச்சை சாப்பிட்டால் உடலில் இந்த மாற்றங்கள் நடக்குமாம்..!
பேரிச்சை
  • Share this:
பேரிச்சையை குறைந்தது 2 என தினமும் சாப்பிட்டு வருவது நன்மை பயக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி என்ன நன்மை என்று பார்க்கலாம்.

எனர்ஜி : இதில் இயற்கையாகவே குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சர்க்கோஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் உடனே கிடைக்கும். அதனால்தான் விரதம், நோன்பு இருந்தாலும் ஆற்றல் கிடைக்க முதலில் பேரிச்சையை சாப்பிடுவார்கள்.

மூளைக்கு ஆரோக்கியம் : ஃபைபர், ஃபெனோலிக்ஸ் , ஆண்டி ஆக்ஸிடண்ட், ஃபெருலிக் ஆசிட் என பலவகையான ஊட்டச்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், கூர்மையான திறனையும் அளிக்கிறது.


மலச்சிக்கல் தீர்வு : நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் இருக்காது.

அனீமியா இருக்காது : உடல் சோர்வு, ஹீமோகுளோபின் குறைபாடு போன்ற பிரச்னைகளால் வரும் அனீமியா தொல்லை இருக்காது. இரத்த ஓட்டம் அதிகரித்து சீராகும்.

இதய நோய் வராது : இதயத்தின் செயல்பாடுகளை சீராக்கி அதற்கு தேவையான ரத்தத்தை விரைவாகக் கொண்டு செல்ல உதவும்.

ஆண்களுக்கு உதவும் : ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டதன்படி ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை இன்பமாக்குவதற்கு பேரிச்சையும் நண்பனாக உதவும். கலப்படமில்லாத ஆர்கானிக் பேரிச்சை சாப்பிட வேண்டும்.

வயிற்று போக்கு : வயிற்று போக்கை சரி செய்யும்.

புற்றுநோய் நீக்கி : புற்றுநோய் செல்களுடன் தொடர்ந்து போராடி ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் ஆற்றல் கொண்டது.

எலும்பு உறுதி : எலும்புகளின் உறுதிக்கு பேரிச்சை உதவும்.

உடல் அதிகரிப்பு : எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையே என கவலை கொள்வோர் பேரிச்சை சாப்பிட்டுவர ஆரோக்கியமான உடல் எடை கூடும்.
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading