முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு ஸ்பூன் சீரகத்தில் இத்தனை நன்மைகளா ? தெரிந்துக்கொள்ளுங்கள்..

ஒரு ஸ்பூன் சீரகத்தில் இத்தனை நன்மைகளா ? தெரிந்துக்கொள்ளுங்கள்..

சீரகம்: சீரகம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஒரு செரிமானத்தை தூண்ட உதவுகிறது. இது வாயுவை வெளியேற்றும் மலமிளக்கியாகவும் செயல்படும்.

சீரகம்: சீரகம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஒரு செரிமானத்தை தூண்ட உதவுகிறது. இது வாயுவை வெளியேற்றும் மலமிளக்கியாகவும் செயல்படும்.

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சீரகம் நல்லது.

  • Last Updated :

இந்திய உணவுகளில் சீரகம் தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை அளிக்கக் கூடியது. அதேசமயம் சீரகத்தால் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம். அப்படி என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சீரகம் நல்லது. ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது தூக்க பிரச்சினைகளையும் போக்கலாம். அடுத்ததாக சீரகத்தை வறுத்து சூடான நீரில் கலக்கவும். பின்னர் அதை மீண்டும் கொதிக்க வைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கலாம். இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும்.

சீரகத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. மேலும் இதை தினமும் உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தும். இரவில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும். வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடிக்க செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுகளும் நீங்கும்.குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.

இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடை குறையும் அதிசயத்தையும் காணலாம்.இது எந்த அளவுக்கு நன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அதே அளவு அதிகமாக சாப்பிடாலும் ஆபத்தையும் விளைவிக்கும். சீரகத்தை ஒரு நாளைக்கு 300 முதல் 600 மில்லிகிராம்தான் சாப்பிட வேண்டும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்குமாம். அதோடு முந்தைய காலத்தில் கருவை கலைக்க சீரகத்தையும் அதிகமாக சாப்பிடுவார்களாம். எனவே கரு நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சீரகத்தை அளவாக சாப்பிட வேண்டும்.

 Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Healthy Food