பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட இதன் நன்மைகள் தெரிஞ்சா கட்டாயம் சாப்பிடுவீங்க..

பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட இதன் நன்மைகள் தெரிஞ்சா கட்டாயம் சாப்பிடுவீங்க..

பீட்ரூட்டுகளில் இருக்கும் நைட்ரேட்டுகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது மற்றும் மூளைக்கு அதிகரித்த இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.

பீட்ரூட்டுகளில் இருக்கும் நைட்ரேட்டுகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது மற்றும் மூளைக்கு அதிகரித்த இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.

  • Share this:
நம்மில் பலருக்கும் பீட்ரூட் காய்கறியை சமைத்து சாப்பிட பிடிக்காது. ஏனெனில் அதில் உள்ள ஒருவகை இனிப்பு சுவை சிலருக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இதனாலேயே ஏராளமான நல்ல விஷயங்களை கொண்ட பீட்ரூட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சில சேர்மங்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், பீட்ரூட் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே உங்கள் உணவில் பீட்ரூட்களைச் சேர்ப்பது ஒரு சரியான தேர்வாக இருக்கும். விலைகுறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட் குறித்து தெரிந்து கொண்டால் கட்டாயம் நீங்கள் அதை தவிர்க்கமாடீர்கள்.

அழற்சியைத் தடுக்கிறது

பீட்ரூட்களில் பீட்டாலின்கள் எனப்படும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, நாள்பட்ட அழற்சி தவிர்க்கப்படுகிறது. பீட்ரூட்டை உட்கொள்வது கீல்வாதத்தில் வலி நிவாரணத்தை ஏற்படுத்துகிறது.

செரிமான சக்தியை பலப்படுத்துகிறது

பீட்ரூட்கள் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த உணவாகும். ஒரு பீட்ரூட்டில் குளுட்டமைன், அமினோ அமிலங்கள், 3.4 கிராம் ஃபைபர் உள்ளது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதனால் மலச்சிக்கல், அழற்சி குடல் நோய்கள், டைவர்டிக்யூலிடிஸ், பெருங்குடல் புற்றுநோய் போன்ற அபாயங்களை குறைகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

மூளையின் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது

பீட்ரூட்டுகளில் இருக்கும் நைட்ரேட்டுகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது மற்றும் மூளைக்கு அதிகரித்த இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. மேலும் இது மென்மையான மூளை செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

பீட்ரூட்களில் உள்ள நைட்ரேட்டுகள் தான் உங்கள் இதய ஆரோக்கியம் நன்றாக இருப்பதை உறுதி செய்கிறது. அவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் செயல்படுகின்றன. மாரடைப்பு போன்ற பிற இதய நோய் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

இது ஃபைபர் நிறைந்ததாக இருப்பதால், பீட்ரூட்கள் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவுகின்றன. அவை எந்த அசாதாரண உயிரணு வளர்ச்சியையும் அழிக்கின்றன. பீட்ரூட்கள் வைட்டமின் பி 6, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எனவே, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் உங்கள் ஒட்டுமொத்த தேவை பீட்ரூட்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், பீட்ரூட்களின் ஜூஸ் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் சிவப்பு வன்ணத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், புற்றுநோயுடன் போராடும் வல்லமைகொண்டது.

இதுதவிர நீங்கள் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால்,  நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது. பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். எனவே, தவறாமல் உங்கள் உணவில் பீட்ரூட் காய்கறியை சேர்த்து கொள்ளுங்கள்.
Published by:Ram Sankar
First published: