ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு... பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு... பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

பிரவுன் சுகர்

பிரவுன் சுகர்

Brown Sugar : பொதுவாக சர்க்கரை உடல் பருமன் , நாள்பட்ட இதய நோய் மற்றும் டைப் 2 டயபடிக்கை உண்டாக்கும் என கூறப்படுகிறது. எனவே அதை அளவாக உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜூஸ் தொடங்கி எந்த பானமாக இருந்தாலும் சர்க்கரையை தவிர்க்க முடியாது. ஆனால் இதன் அளவுக்கு அதிகமான பயன்பாடு பல்வேறு வகையான ஆபத்துகளை தருவதால் மக்கள் இதற்கு மாற்று வழிகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கியிருப்பது பிரவுன் சுகர் (Brown Sugar).

  வெள்ளை சர்க்கரை உடல் பருமன் , நீரிழிவு நோய் மற்றும் இதய நோயை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக atkins.ca என்னும் ஆய்வில் வெள்ளை சர்க்கரையில் நீரிழிவு நோயை உண்டாக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இது போன்ற காரணங்களுக்காகவே பிரவுன் சுகர் சிறந்த மாற்று என்று கூறப்படுகிறது. உண்மையில் பிரவுன் சுகர் ஆரோக்கியத்திற்கு நல்லதா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்.? பக்கவிளைவுகள் என்ன..? போன்ற விளக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

  பிரவுன் சுகர் என்றால் என்ன..?

  பிரவுன் சுகர் என்பது தமிழில் நாட்டு சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. இது கரும்பு சாறிலிருந்து தயாரிக்கப்படும் நாட்டு வெல்லத்தை தூளாக்கி பிரவுன் சுகர் என்று வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் தயாரிப்பில் கெமிக்கல் கலப்படம் குறைவு என்பதால் வெள்ளை சர்க்கரையை காட்டிலும் நாட்டுச் சர்க்கரை சிறந்ததாக கருதப்படுகிறது.

  நாட்டு சர்க்கரையில் இரும்புச் சத்து, கால்சியம், ஸிங்க் போன்ற மினரல் சத்துக்கள் நிறைவாக உள்ளன. எனவே இது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியத்திற்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் சரண்யா ஷாஸ்த்ரி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

  Also Read : அரிசிக்கு பதிலாக குயினோவா சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பது எளிதா..? நன்மைகள் இதோ...

  பிரவுன் சுகரில் வெள்ளை சர்க்கரையை காட்டிலும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. அதாவது 100 கிராம் பிரவுன் சுகரில் 83mg கால்சியம் சத்து உள்ளது. ஆனால் வெள்ளை சர்க்கரையில் 1mg தான் உள்ளது. இருப்பினும் இந்த சத்து என்பது மிகச்சிறிய அளவுதான் என்பதால் அது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவதில் பெரிய பங்களிக்காது. எனவேதான் பொதுவாக சர்க்கரையை வெற்று கலோரி (empty calories) என்று அழைக்கிறோன் என டாக்டர் பிரியங்கா ரோஹத்கி, (தலைமை மருத்துவ உணவு நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை) கூறியுள்ளார்.

  ஒரு நாளைக்கு எவ்வளவு நாட்டு சர்க்கரை சாப்பிடலாம்..?

  பொதுவாக சர்க்கரை உடல் பருமன் , நாள்பட்ட இதய நோய் மற்றும் டைப் 2 டயபடிக்கை உண்டாக்கும் என கூறப்படுகிறது. எனவே அதை அளவாக உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் சர்க்கரை அல்லது 100 கலோரிகள் உட்கொள்வது நல்லது. ஆண்களுக்கு 9 டீஸ்பூன் அல்லது 150 கலோரிகள் எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர் அஜய் நாயர் கூறியுள்ளார். எந்த சர்க்கரையாக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு 2 ஸ்பூன் அதாவது 10 கிராம் எடுத்துக்கொள்வது நல்லது என ஷாஸ்த்ரி கூறுகிறார்.

  நாட்டு சர்க்கரை தரும் தீமைகள் :

  எந்த உணவாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது பக்கவிளைவுகளை உண்டாக்கும். அந்த வகையில் பிரவுன் சுகரும் பக்கவிளைவுகளை உண்டாக்கும். அந்த பாதிப்புகள் அதிக அளவில் இல்லை என்றாலும் குறிப்பிட்ட பாதிப்புகளை உண்டாக்கலாம்.

  Also Read : “பிரவுன் சுகர் இருக்க பயமேன்”... நாட்டு சர்க்கரைக்குள் மறைந்திருக்கும் 6 நன்மைகள்..!

  அப்படி ”குறிப்பிட்ட அளவை மீறி பிரவுன் சுகர் உட்கொள்ளும்போது இன்சுலின் தட்டுப்பாடு, உடல் எடை அதிகரித்தல், ஈஸ்ட் தொற்று உருவாதல், நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்” என ஷாஸ்த்ரி குறிப்பிடுகிறார். இருப்பினும் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது நாட்டு சர்க்கரையை உட்கொள்வது பாதுகாப்பானது என்கிறார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Brown Sugar, Side effects